தங்கமே தங்கம் ! (பீ.எம். கமால், கடையநல்லூர்)

சிந்தனையைத் தூண்டிவிட்டாய்
தங்கமே தங்கம் – எங்கள்
சிரிப்பினையே மரிக்க வைத்தாய்
தங்கமே தங்கம் !

அக்கரைச் சீமையிலே
தங்கமே தங்கம்-எங்கள்
அக்கறையைக் கூட்டிவிட்டாய்
தங்கமே தங்கம் !

விலைவாசி கூடினாலும்
தங்கமே தங்கம்-நாங்கள்
வெறும் வயிராய்க் கிடபபதில்லை
தங்கமே தங்கம் !

நீயுமுண வோடுவந்து
தங்கமே தங்கம்-இங்கு
நீக்கமறச் சேர்ந்துவிட்டாய்
தங்கமே தங்கம் !

உன்னோடு சேர்ந்திருக்க
தங்கமே தங்கம்- எங்கள்
பெண்களெல்லாம் நாடுகின்றார்
தங்கமே தங்கம் !

ஏணிப்படி இல்லாமல்
தங்கமே தங்கம்-நீ
ஏனிப்படி ஏறினாய்
தங்கமே தங்கம் !

ஏழை இல் லாதவர்க்கு
தங்கமே தங்கம்-நீ
எட்டாக்கனி ஆனதேனோ
தங்கமே தங்கம் ?

Ampicillin online justify;”>கழுத்தில் நகை நட்டாக
தங்கமே தங்கம்- நீ
கால்வைக்கும் முன்பாக
தங்கமே தங்கம் !

உதட்டில் நீ நகையாக
தங்கமே தங்கம் !-நீ
உட்கார வருவாயா ?
தங்கமே தங்கம் !

ஆண்கள் உனை அணியவந்தால்
தங்கமே தங்கம் ! -நீ
ஆகாயத்தில் தானிருப்பாய்
தங்கமே தங்கம் !

ஏழைக்கும் மனமிரங்கித்
தங்கமே தங்கம் !-நீ
இறங்கிவர வேணுமடி
தங்கமே தங்கம் !

Add Comment