தமிழக சட்ட‌ப்பேரவை தேர்தலில் 80 சதவீதம் வா‌க்கு‌ப் பதிவு

தம‌ிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌‌ர்த‌லி‌ல் 80 சத‌வீத‌ம் வா‌க்கு‌ப் ப‌திவு நடைபெ‌ற்று‌ள்ளதாக தலைமை தே‌ர்த‌ல் அ‌திகா‌ரி ‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை தலைமை செயலக‌‌த்‌தில‌் நே‌ற்‌றிரவு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌‌ட‌ம் பே‌சிய அவ‌ர், ச‌ட்ட‌ப்பேரவை தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடந்து முடிந்தது எ‌ன்றா‌ர்.

இந்த தேர்தலில் சுயேச்சைகள் உள்பட அனைத்து அரசியல் கட்சியினரும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர் எ‌ன்று‌ம் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தமிழகம் முழுவதும் 80 சத‌வீத‌ம் வாக்குப்பதிவு நடைபெ‌ற்று‌ள்ளதாக Buy Amoxil தெ‌ரி‌‌வி‌த்த ‌பிர‌வீ‌ண்குமா‌ர், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 86 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன எ‌ன்று‌ம் குறைந்தபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 74 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன என்று‌‌ம் கூ‌றினா‌ர்.

தேர்தலையொட்டி நடத்தப்பட்ட வாகன சோதனைகளில் ரொக்கப்பணம், பரிசுபொருட்களின் மதிப்பு ரூ.45 கோடி எ‌ன்று கூ‌றிய ‌பிர‌வீ‌ண்குமா‌ர், இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு ரூ.5 கோடி திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது எ‌ன்று‌‌ம் மீதம் உள்ள பணத்தில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாவிட்டால் அந்த தொகை தேசிய கருவூலத்திற்கு அனுப்பப்படும் எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்தது தொடர்பாக 1,565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எ‌ன்று‌ம் 53 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் எ‌ன்று‌ம் ‌‌பிர‌வீ‌ண்குமா‌ர் கூ‌றினா‌ர்.

Add Comment