கொடைக்கானலில் சீசன் துவங்கியது: குவியும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் சீசன் துவங்கியுள்ளது. இதையடுத்து கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு செல்கின்றனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் `குளுகுளு சீசன்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கி ஜூன் மாதம் 2-வது வாரத்தில் முடியும். என்னதான் கோடை காலம் என்றாலும், கொடைக்கானலில் இதமான பருவ நிலை நிலவும். மேலும், அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து குளிரவைக்கும்.

பிரையன்ட் பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக சிங்க முகம் கொண்ட பேன்சி ரக பூக்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. மேலும் பெட்டுன்னியா, காலன்டால்வியா, அந்தரியம் போன்ற பல்வேறு வகையான பூக்களும் பூக்கத் துவங்கியுள்ளன.

இந்த ஆண்டு போதிய மழை பெய்துள்ளதால் குடிநீர் பிரச்சனை ஏற்படாது. பல கோடி ரூபாய் செலவில் நகரில் உள்ள முக்கிய சாலைகள், ஏரியை சுற்றிலும் தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் புதிதாக மின்சார கார் வசதி செய்யப்பட்டு விரைவில் செயல்பட உள்ளது. அதேபோல் ஸ்கேட்டிங் ஹாலும் விரைவில் செயல்பட உள்ளது.

ஏரியை சுற்றி உள்ள 4.8 கிலோ மீட்டர் தூரத்தில் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுங்க நிதி மூலம் ரூ.50 லட்சம் செலவில் உலகத்தரம் வாய்ந்த கிரானைட் நடைபாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சீசன் துவங்கியவுடனே அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் இனிவரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Buy cheap Bactrim

Add Comment