உலகத் தமிழ் செம்மொழி மாநாடு – விடுமுறை கோரும் அரசு ஊழியர்கள்

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி அரசுஅலுவலகங்களுக்கு விடுமுறை விட்டு மூட வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகத் தமிழ்ச் Buy Doxycycline Online No Prescription செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23 ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 3 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மூன்று நாள்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்த கோரிக்கை மனுவை, முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி ஆகியோரிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள் அளித்துள்ளனர்.

அந்த மனுவில், செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில், அரசு ஊழியர்கள் குறிப்பாக தலைமைச் செயலகத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்க விருப்பம் கொண்டுள்ளனர்.

Add Comment