மத்தியிலும், மாநிலத்திலும் வெற்றிக் கூட்டணி தொடர்கிறது – வாசன்

மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ்- திமுக கூட்டணியின் வெற்றிக் கூட்டணி தொடர்வதாக மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார்.

இன்று கோபாலபுரம் இல்லம் சென்ற ஜி.கே.வாசன், முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். Buy Bactrim இது வழக்கமான மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று கூறப்பட்டது.

ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பதவியில் விருப்பமில்லாமல் இருப்பதாகவும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் மீண்டும் அமர விரும்பி மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்து வருவதாகவும் முன்பு செய்திகள் வந்த நிலையில், முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் வாசன் பேசுகையில்,

மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், மாநிலத்தில் ஜனநாயக முற்போக்கு கூட்டணியும் தொடர்ந்து 6 வருடங்களாக, வெற்றி கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறது.

அதற்கு எடுத்துக்காட்டாக இரண்டு முறை நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி இடைத்தேர்தல்களில் தொடர்ந்து இந்த கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களுக்கும், செயல்பாட்டிற்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெருகி வருகிறது என்றார்.

Add Comment