பேரணி ரயில் பாதை தகர்ப்பு: தீவிரவாத செயல் இல்லை-டிஜிபி

விழுப்புரம் அருகே ரயில் பாதை குண்டு வைத்த சம்பவத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பில்லை. உள்ளூர்க்காரர்கள்தான் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தமிழக போலீஸ் டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

பேரணி ரயில் நிலையப் பகுதியில், ரயில் பாதை குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் அதிர்ஷ்டவசமாக தப்பியது.

வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றம்

இந்த நிலையில் இந்த வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டிருப்பதாக டிஜிபி லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், இந்த வழக்கு கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த செயலுக்கு தீவிரவாத பின்னணி எதுவும் இருப்பதாக தெரியவில்லை. உள்ளூர் வெடிபொருட்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உள்ளூர் வி்ஷமிகளே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விசாரணை முடிவில்தான் இவை தெரிய வரும்.

தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்கள், ரயில்கள், முக்கிய இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் பாதைகளில் தீவிர ரோந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Doxycycline No Prescription

Add Comment