தமிழக மருத்துவக் கவுன்சிலிங் – ஜூன் 28க்கு தள்ளிவைப்பு

ஜூன் 21ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ கவுன்சிலிங் 28-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியது:

3 அரசு கல்லூரிகளுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஆனதால் ஜூன் 21ஆம் தேதி நடைபெற இருந்த மருத்துவ கவுன்சலிங், ஜூன் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Cialis online style=”text-align: justify;”>இந்த மாற்றத்துக்கு இன்னொரு முக்கிய காரணம், மறு கூட்டலில் மதிப்பெண் வெளியிடப்படுவதில் ஏற்பட்ட தாமதம்…” என்றார்.

ரேங்கிங் பட்டியல் வெளியீடு

முன்னதாக மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்கிங் பட்டியலை அமைச்சர் பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

இதில் 13 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றனர்.

மருத்துவ கல்லூரிகளில் சேர மொத்தம் 18 ஆயிரத்து 131 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். மாணவர்கள் 6 ஆயிரத்து 423, மாணவிகள் 11 ஆயிரத்து 048. 17 ஆயிரத்து 610 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களில் முதல் பட்டதாரி மாணவர்கள் 6440. தமிழகம் முழுவதும் இருக்கும் 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் ‌சேர்வதற்கான முதல் கட்ட கவுன்சிலிங் வருகிற 28ம் தேதி நடைபெறுகிறது.

முதல் கட்ட கவுன்சிலிங்கில் தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கு இடமில்லை. 2ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 3வது வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகள்: ஈரோடு ஸ்ருதி, ஈரோடு அபிநயா, விழுப்புரம் கவுதம், ஈரோடு செல்வமலை முத்துக்குமரன், சென்னை திணேஷ், சென்னை ஸ்ருதி, கோவில்பட்டி திவ்யா, திண்டுக்கல் பிரணேஷ், பழனி அனுசுயா, தேனி பார்த்தசாரதி.

Add Comment