உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்

உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல்
அபுதாபியில் உல‌க‌ ம‌க்க‌ளைக் க‌வ‌ர்ந்து வ‌ரும் ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌ல் க‌ட‌ந்த‌ 2007 ஆம் ஆண்டு திற‌க்க‌ப்ப‌ட்ட‌து. உல‌கின் மிக‌ப்பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல்க‌ளில் ஒன்றான‌ ஷேக் ஸையித் ப‌ள்ளிவாச‌லில் ஒரே நேர‌த்தில் 30,000 பேர் தொழுவ‌த‌ற்கான‌ வ‌ச‌தி கொண்ட‌து. ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌த்தின் அதிப‌ராக‌ இருந்த‌ ஷேக் ஸையித் பின் சுல்தான் அவ‌ர்க‌ள் ம‌றைவைய‌டுத்து அவ‌ர் இப்ப‌ள்ளியின் அருகில் அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்டார். அமீர‌க‌ வ‌ள‌ர்ச்சிக்கு அரும்பாடுப‌ட்ட‌ அவ‌ர‌து சேவையினைப் போற்றும் வ‌ண்ண‌ம் இப்ப‌ள்ளிக்கு அவ‌ர‌து பெய‌ர் வைக்க‌ப்ப‌ட்ட‌து.
இப்பள்ளி முழுக்க‌ முழுக்க மார்பிளால் க‌ட்ட‌ப்ப‌ட்டு, இஸ்லாமிய‌ க‌ட்ட‌ட‌க்க‌லைக்கு சான்றாக‌த் திக‌ழ்கிற‌து. 22,000 ச‌துர‌ அடி ப‌ர‌ப்பில் இப்ப‌ள்ளி க‌ட்ட‌ப்ப‌ட்டுள்ள‌து. 33,000 ட‌ன் இரும்பு இப்ப‌ள்ளி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. ப‌ள்ளியைச் சுற்றிலும் ப‌ச்சைப்ப‌சேல் என‌ புல் வெளிக‌ள் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. உல‌கெங்கிலும் இருந்து வ‌ரும் ப‌ல்வேறு நாடுக‌ளைச் சேர்ந்த‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ளும், அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் ப‌ல்வேறு நாட்ட‌வ‌ரும் ஆயிர‌க்க‌ண‌க்கில் இங்கு வ‌ருகை த‌ந்து பிரார்த்திக்கின்ற‌ன‌ர். இப்ப‌ள்ளிக்கு வ‌ருகை புரிவ‌த‌ன் த‌ங்க‌ளுக்கு ம‌ன அமைதியும், இத‌ய‌த்திற்கு இத‌மும் கிடைப்ப‌தாக‌ குறிப்பிடுகின்றன‌ர் இங்கு வ‌ந்து செல்லும் ப‌ல்வேறு நாட்டின‌ர்.

 

vkalathur.com
vkalathur.com
vkalathur.com
Buy Bactrim Online No Prescription alt=”vkalathur.com” width=”600″ height=”418″ />
vkalathur.com
vkalathur.com

Add Comment