விரைவில் நம் ஊரில் மெர்சிடிஸ் பென்ஸ் சிட்டி பஸ்கள்!

ஜெர்மனியின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், இந்தியாவில் விரைவில் நகரப் பேருந்துகளை (City Bus) அறிமுகப்படுத்தவுள்ளது.

இப்போது பெங்களூர், சென்னை உள்ளிட்ட சில நகர்களில் வோல்வோ ஏசி பஸ்கள் நகரப் பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. Amoxil No Prescription இது தவிர டாடாவின் மார்கோபோலோ ரக நவீன தாழ்தளப் பேருந்துகளும் நகர்ப் பகுதிகளில் டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன.

இந்த சந்தையில் இப்போது மெர்சிடிஸ் பென்ஸ் நுழையவுள்ளது.

இதற்காக இந்தியாவில் தொழிற்சாலையையும் உருவாக்க ஆரம்பித்துவிட்டது மெர்சிடிஸ். முதலில் ஆண்டுக்கு 500 பஸ்கள் வரை தயாரிக்கவு்ம், பின்னர் விற்பனையை ஆண்டுக்க 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மெர்சிடிஸ் இந்தியா நிறுவனத் தலைவர் வில்பிரைட் ஆல்புர் தெரிவித்துள்ளார்.

சிட்டி பஸ்கள் தவிர டபுள் ஆக்ஸில், ட்ரிபிள் ஆக்ஸில்கள் கொண்ட நெடுந்தொலைவு செய்யும் ஆம்னி பஸ்களையும் இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Add Comment