தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் – கூட்டணி ஆட்சியா?

அப்பாடா போறாத வெய்யிலில் எல்லாரும் ஒருவழியாக ஓட்டு போட்டுவிட்டீர்களா!.

தமிழக வாக்காளர்கள் இந்தமுறை சுதாகரித்துக் கொண்டார்கள் போலிருக்கிறது. தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக 78-80 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதால் அரசியல் கட்சிகள் அனைத்தும் பெரிதாக குழம்பிபோய் நிற்கின்றனர். எப்போதுமே தமிழக மக்கள் வாக்களிக்கும்போது மிகச்சரியாக தங்கள் வாக்குகளை பயன்படுத்துவார்கள். மாற்றம் வேண்டும் என்ற தருணங்களில் மிகச்சரியாக பெரும்பான்மையான வாக்குகளை தனிப்பெரும் கட்சிக்கு அளிப்பார்கள்.

இந்த முறை எப்படி பார்த்தாலும் இருவரில் ஒருவர்தான் ஆளப்போகிறார்கள். எனவே அவர்களுக்கு கடிவாளம் போட்டால் தான் சரியான திசையில் செல்வார்கள் என்பது தமிழக மக்களின் கணிப்பு. எனவேதான கூறுகிறேன் கூட்டணி ஆட்சிதான் என்று. மேலும் திமுக பெரும்பாண்மை பெறும் அளவிற்கு போதிய தொகுதிகளில் நிற்கவில்லை என்பதே அது கூட்டணி ஆட்சிக்கு எற்ப தன்னை முன்கூட்டியே தயார் செய்து கொண்டது என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.

இந்த முறை ஸ்பெக்ட்ரம், ஈழத்தமிழர்கள் பிரச்சனை, மின்வெட்டு போன்ற விஷயங்களில் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு இருப்பது உண்மையே. மற்றபடி பெரிதாக திமுகவிற்கு எதிரான அலைஅடிக்கிறது என்றெல்லாம் கூறிவிட முடியாது.

கடந்த 5 வருட திமுக ஆட்சியில் பெரும்பாலான நலத்திட்டங்கள் நன்றாகவே நடைபெற்றுள்ளன. முடிந்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மைகளையே கலைஞர் அரசு வழங்கியுள்ளது. கடந்த ஜெயா ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கலைஞர் பரவாயில்லை என்றுதான் மக்கள் நினைக்கின்றனர். ஜெயா வந்தால் எல்லோருக்கும் நன்மை செய்கிறாரோ இல்லையோ கசப்பு மருந்து நிச்சயம் தந்துவிடுவார் no prescription online pharmacy என்பது மக்களுக்குத் தெரியும். ஜனநாயகத்தில் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத ஒன்று. காமராஜர், எம்.ஜி.ஆரையே தேர்தல்களில் மக்கள் ஏமாற்றிவிட்டார்களே. ஜனநாயகத்தில் இதெல்லாம் சகஜமப்பா.

இலவசம் என்பது தவறுதான் என்ன செய்வது, புலிவாலை விட்டால் ஆட்சியை பிடிக்க முடியாதே. ஆட்சி இல்லையென்றால் எதிரிகள் ஏறிமிதித்து விடுவார்களே. எனவே இரண்டு பெரிய கட்சிகளும் இலவசங்களை அள்ளி தெளித்துள்ளார்கள். தமிழகத்தில் கூட பரவாயில்லை புதுச்சேரியை பாருங்கள் மக்களுக்கு லக்கிலாட்டரி தான் போங்கள். இதெல்லாம் நடக்குமென்றா நினைக்கிறீர்கள். நிச்சயம் நடக்காது.

எப்படியானாலும் அதிக இடங்களைப் பெறும் தனிப்பெரும் கட்சியாக 70 முதல்80 இடங்களை திமுக அல்லது அதிமுக பெறக்கூடும் என்பது எனது கருத்து. நிச்சயம் இந்த முறை தொங்கு சட்டசபை அல்லது கூட்டணி ஆட்சிதான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

கூட்டணி ஆட்சி என்று வரும் போது 70-80 இடங்களைப்பெறும் தனிப்பெரும் கட்சி ஏதாவது 2 (அ) 3 கட்சிகளின் (தோராயமாக 15-20 இடங்களைப் பெறும் கட்சிகள்) ஆதரவோடு ஆட்சியமைக்க முடியும்.

தேர்தல் முடிவுகளுக்குப்பின்பு கம்யூனிஸ்ட்டுகளும் காங்கிரசும் ஏறத்தாழ சமமான எண்ணிக்கையிலான தொகுதிகளையே பெறுவர் (15-20) என்பது என் கணிப்பு. காங்கிரஸ் முரண்டுபிடித்தால் கம்யூனிஸ்ட்களின் துணையோடு ஆட்சியமைக்க முடியும்.

ராமதாஸ் குறித்து கவலையே வேண்டாம் அதிமுகவுக்கு சென்றால் ராஜ்யசபா நிச்சயம் கிடைக்காது எனவே அவரது நிபந்தனையற்ற ஆதரவு திமுகவுக்கு நிச்சயம் உண்டு. (ஸீட்டு ஜெயிச்சா அப்புறம் பார்ப்போம்) மற்ற குட்டி கட்சிகளையெல்லாம் கேட்கவே வேண்டாம். அவர்களுக்கு எதாவது வாரியத்தில் பதவி கொடுத்தாலே போதுமானது.

விஜயகாந்த் 15-20 இடங்களைப் பெற்றால் கொஞ்ச நாள் குழப்புவார் ஆனால் அவரால் நிச்சயம் அதிமுகவோடு இணைந்து பணியாற்ற முடியாது. எனவே அவர் பிரச்சனைகளின் அடிப்படையில் வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்தால் கூட போதுமானது. கலைஞரின் உடல்நிலை ஒத்துழைத்தால் நிச்சயமாக ஸ்டெடியாக 5 வருடங்களை ஓட்டிவிடலாம். ஆனால் இந்த அளவிற்கு மணல் கொள்ளை, திரைப்படத்துறையில் ஆதிக்கம் மற்றும் டாஸ்மாக் என்றெல்லாம் விளையாட முடியாது கண்ணா!.

இதன்படி பார்த்தால் கலைஞரால் மட்டும் தான் கூட்டணிகட்சிகளோடு சுமுகமாக இணைந்து ஆட்சியமைக்க முடியும். சென்றமுறை இருந்த அளவிற்கு பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி சேரும் கட்சிகள் மக்கள் நலனை வலியுறுத்தி பிரச்சனைகளின் அடிப்படையில் குரல் கொடுக்கும் கட்சிகளாக இருந்தால் சிறப்பானதொரு ஆட்சி இந்தமுறை அமையும் என்பது எனது கருத்து.

தேர்தல் கூட்டணியையே ஆணவத்துடன் அவமதித்த ஜெயலலிதா கூட்டணி ஆட்சி நடத்த தகுதியற்றவர் என்பது என் கருத்து. ஏனெனில் கட்சிகாரர்களின் ஆலோசனைகளையோ, கூட்டணி கட்சி தலைவரிகளின் கருத்துகளையோ கேட்டு ஆட்சி செய்யும் பொறுமையோ பக்குவமோ இன்னும் ஜெயலலிதாவுக்கு வரவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற தடாலடி முடிவுகள் எல்லாம் தமிழக மக்கள் அறியாததா. கொஞ்சம் மாறியிருப்பார் என்று நினைத்தால் தான் மாறவில்லை என்று தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிலேயே அவரே உறுதிபடுத்திவிட்டார். தனது சுயநலத்துக்காக வாஜ்பாய் அரசை கவிழ்த்த ஜெயலலிதா நிச்சயம் கூட்டணி அரசு அமைக்க தகுதியற்றவர். மீறி கூட்டணி அரசு ஜெயா தலைமையில் அமைந்தால் தமிழகம் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க தயாராக இருக்கவேண்டும்.

எனவே இந்த முறை கூட்டணிகட்சிகளோடு திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அதன் நலத்திட்டங்கள் முன்புபோல் மீண்டும் அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் யாரும் கவலையே பட வேண்டாம். திமுக எதிர்ப்பாளர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக்கூடாது. நான் நடுநிலையோடு தான் எழுதுகிறேன். மன்னிச்சுங்கண்ணா

Add Comment