டி.வி. சேனலும், டி.ஆர்.பி. ரேட்டிங்கும்

டி.வி. சேனலும், டி.ஆர்.பி. ரேட்டிங்கும்

டி. வி. சேனல் எல்லாவற்றுக்குமே சுவாச மந்திரம் எதுவென்றால், அது டி.ஆர்.பி. ரேட்டிங்தான். இதை வைத்துதான் ஒரு சேனலின் வரவும், விளம்பரமும் நிர்ணயிக்கப்படுகின்றன. டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட் என்பதன் சுருக்கமே டி.ஆர்.பி. என்பது.

டி.ஆர்.பி. ஏற ஏற விளம்பரக்கட்டணம் எகிறும். உதாரணமாக ஆறரைக் கோடி மக்கள் இருக்கும் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 650 வீடுகளை மட்டும் தேர்ந்தெடுப்பார்கள். Buy Doxycycline தேர்ந்தெடுக்கப்பட்ட வீடுகள் எல்லாவற்றிலும் ‘டேம் பாக்ஸ்’ என்ற ஒரு கருவியை பொருத்திவிடுவார்கள். இப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பது பெரும்பாலும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கே தெரிவதில்லை. அந்த வீட்டில் இருக்கும் டி.வி. யை ஆன் செய்தவுடன் டேம் பாக்சும் ‘ஆன்’ ஆகிவிடும். அவர்கள் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்? எந்தெந்த சேனல்களுக்கு தாவுகிறார்கள்? எந்த மாதிரி நிகழ்சிகளை பார்க்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாவற்றையும் விலாவரியாக பதிந்துவிடும், வாரத்துக்கு ஒருமுறை இந்த டேம் பாக்சை எடுத்து பதிவான தகவல்களை எல்லாம் சேகரிப்பார்கள். இந்த 605 டேம் பாக்ஸ்களில் பதிவான தகவல்களை அப்படியே ஆறரை கோடி மக்களுக்கான தகவலாக மாற்றுவார்கள். அதுதான் டி.ஆர்.பி.

Add Comment