வெளிநாட்டில் நான்..

சோகங்களைச் சொந்தமாக்கி

இதயத்தைப் பாரமாக்கி

இருட்டினில் நாம்

வெளிநாட்டில் நான்!

அன்புக்குச் சேதாரமாய்

உன் புகைப்படம் மட்டும்

தற்போது ஆதாரமாய்!

எல்லாமே இழந்து

பணத்துக்காக மட்டுமே

இங்கேப் பயணம்;

எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உன் சந்திப்பின் தருணம்!

புத்தாடை உனக்குண்டு

பிள்ளைக்கு நகையுண்டு

buy Bactrim online style=”text-align: justify;”>செலவுக்குப் பணமுண்டு;

உழைக்க நானுண்டு

பிழைக்கப் பாலையுண்டு!

சிந்தியக் கண்ணீரையும்

சிரிப்பால் மறைப்பேன்;

கவலையேதுமில்லை என

உரைப்பேன்!

மச்சினனுக்கும் விசா வேண்டுமென

விண்ணப்பம் ஒன்றுப் போட்டாய்;

சிரித்துக்கொண்டே அழைத்துக்கொண்டேன்

வளைகுடா வலையில்

இன்னொரு விருந்தாளியா

என்னைப்போல ஏமாளியா!

-யாசர் அரஃபாத்

Add Comment