சிறுபான்மை மாணவர் உதவித் தொகை! விண்ணப்பிக்க புதிய இணையதளம் துவக்கம்!!

மத்திய அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி திட்டங்களில் ஒன்று தகுதி மற்றும் வருவாய் அடிப்படை திட்டம் (Merit-cum-Means based scholarship). இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பெற மத்திய சிறுபான்மை துறை அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் முடிவெடுத்தது. நவம்பர் மாதம் நடத்தப்பட்ட கலந்தாலோசனையில் – மாநில அரசாங்கங்களிடம் இருந்து இதற்க்கான ஒப்புதல் பெறப்பட்டு, இணையதளத்தை வடிவமைக்கும் பொறுப்பு National Informatics Centre (NIC) என்ற மத்திய அரசாங்க அமைப்பிடம் வழங்கப்பட்டது.

முதற்கட்டமாக Online Scholarship Management System (OSMS) என்ற இத்திட்டம் – மார்ச் 1 அன்று கல்வி நிறுவனங்களுக்கான பகுதியுடன் (Institutions Module) துவக்கப்பட்டது. ஏப்ரல் 15 அன்று மாணவர் பகுதியும் (Students Module) துவக்கப்பட்டது.

புது டில்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மை துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் கலந்துக்கொண்டு, இணையதள சேவைகளை துவக்கி வைத்தார். புதிய இணையதளத்தின் முகவரி www.momascholarship.gov.in. அவ்வேளையில் பேசிய அமைச்சர் Buy Amoxil Online No Prescription இத்திட்டத்தின் செயல்ப்பாட்டின் அடிப்படையில் மத்திய அரசின் சிறுபான்மை மாணவர்களுக்கான பிற உதவி தொகை திட்டங்களும் – இதன் கீழ் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

இப்புது இணையதளம் குறித்த தகவல் மத்திய சிறுபான்மை துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.minorityaffairs.gov.in இலும் வழங்கப்பட்டுள்ளது.

Add Comment