கடந்த 2 முறை அர்ஜென்டினாவிடம் தோற்றதற்கு நைஜீரியா இன்று பழி தீர்க்குமா?

கடந்த 2 உலகக்கோப்பைப் போட்டிகளிலும் அர்ஜென்டினாவிடம் தோல்வியுற்றதைத் துடைக்கும் வகையில் இன்றைய போட்டியில் அர்ஜென்டினாவை வெல்ல நைஜீரியா துடிப்புடன் களம் இறங்குகிறது.

உலகக் கோப்பைப் போட்டியின் 3வது போட்டியாக இன்று ஜோஹன்னஸ்பர்க்கில் அர்ஜென்டினாவும், நைஜீரியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டி படு விறுவிறுப்பாக அமையும் எனக் கருதப்படுகிறது.

கடந்த இரு முறையும் அர்ஜென்டினாவிடம் முறையே 1-2, 0-1 என்ற கோல் கணக்கில் நைஜீரியா தோல்வியைத் தழுவியிருந்தது. இதற்கு இன்றையப் போட்டியில் திருப்பிக் கொடுக்கப் போவதாக நைஜீரிய வீரர் டாயி தைவோ கூறியுள்ளார்.

இது நாங்கள் திருப்பிக் கொடுக்கும் நேரம். 2005ல் நெதர்லாந்தில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைப் போட்டியில் நான் அர்ஜென்டினாவுக்கு எதிராக ஆடினேன். அப்போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் நாங்கள் தோற்றோம். அதற்கும், முந்தைய இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் தோற்றதற்கும் சேர்த்து இன்றைய போட்டியில் வெல்ல முயற்சிப்போம் என்றார்.

Buy Amoxil style=”text-align: justify;”>இருப்பினும் லியோனல் மெஸ்ஸி என்ற அபாயகரமான தாக்குதலை நைஜீரியா சமாளிக்கப் போவதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். போட்டியை யார் வெல்கிறார்களோ, நிச்சயம் படு சூடானதாக அது அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Add Comment