காயல்பட்டினத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 15-வது மாநாடு 2011 ஜூலை 8,9,10 தேதிகளில் நடைபெறுகிறது

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் இது வரை பதினான்கு மாநாடு களை நாகூர், நீடூர், காரைக்கால், சென்னை, திருச்சி, கோட்டகுப்பம், முத்துப்பேட்டை, ராஜகிரி, புதுச்சேரி, மயிலாடுதுறை, பள்ளபட்டி , பரமக்குடி, தஞ்சாவூர், அதிராம்பட்டி னம் ஆகிய நகரங்களில் சிறப்போடு நடத்தி இருக் கிறது. நூற்று எண்பது நூல்கள் பல்வேறு துறைக ளிலும் வெளியிடப்பட்டுள் ளது சாதனை படைத்த சான்றோர்கள், எழுத்தாளர் கள், கவிஞர்கள், பத்திரிகை யாளர்கள், சமுதாய புரவ லர்களுக்கு இம் மாநாடு களில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளனர். இம் மாநாடுகளில் அனைத்து சமுதாய கல் லூரி மாணவ – மாணவி களும் பங்கேற்ற கட்டுரைப் போட்டிகள் இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாக வெளியிட்டுள்ள `இஸ்லாமியத் தமிழ் இலக் கிய ஆய்வுக் கோவை’, `மானுடம் போற்று வோம்’, `இஸ்லாமியத் தமிழ் எழுத்தாளர்கள்’, `இலக்கிய உலகம்’, இஸ்லாம் வளர்த்த தமிழ்’, `தற்கால இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்’, `இலக்கி யச் செல்வர்கள்’, `ஆய்வுச் சோலை’, `ஆய்வுப் பேழை’ ஆகிய ஒன்பது நூல்கள் தமிழ் உலகில் நன்மதிப்பை பெற்றிருக்கின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சிந் தனைச் செலவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிபின் வழிகாட் டுதலில் ஆரம்பிக்கப்பட்டு நீடூர் வழக்கறிஞர் ஸயீத் சாஹிப் முதல் தலைவரா கவும் செயலாற்றியிருக் கின்றனர். கழகத்தின் தற் போதைய நிர்வாகிகளை உலக ஒருங்கிணைப்பாள ராக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தலைவ ராக கவிஞர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, பொதுச் செயலாளாக காரைக்கால் அண்ணா கலைக் கல்லூரி தமிழ்த் துறை தலைவர் பேராசிரி யர் மு. சாயபு மரைக்காயர், பொருளாளராக சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் ஹ.மு. நத்தர்சா மற்றும் தமிழகம், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடு களில் வாழும் தமிழறிஞர் கள் இலக்கியக் கழகத்தின் அங்கத்தினராக இருக்கின் றார்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு எதிர்வரும் 2011 ஜூலை 8, 9, 10 ஆகிய மூன்று தினங்கள் வர லாற்று சிறப்பும், இஸ்லா மிய தமிழ் இலக்கியங்க ளும் நிறைந்திருக்கும் காயல்பட்டினத்தில் நடை பெற இருக்கின்றது. இம் மாநாட்டில் உலகெங்கி லும் இருந்து இலக்கிய ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள், சமுதாய புரவ லர்கள், மத்திய – மாநில அமைச்சர்கள், பாராளு மன்ற சட்டமன்ற உறுப்பி னர்கள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் என இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் தனிச் சிறப்பை விலக்கிட சான் றோர்கள் பங்கேற்கின்றனர். காயல்பட்டினத்தில் பிறந்த புலவர்கள், மார்க்க அறி ஞர்கள், கவிஞர்கள், இஸ் லாமிய தமிழ் இலக்கியம் மற்றும் அரபு தமிழிலும் பல நூல்களை பல்லாண்டு களுக்கு முன்பாகவே யாத்தளித்துள்ளனர்.

இவ்விலக்கியங்களையும் காயல்பட்டினம் இலக்கிய மாநாட்டில் புதுப்பித்து வெளியிட முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகின் றது. இம் மாநாட்டில் `இலக்கிய இணையம்’ என்ற இலக்கிய ஆர்வலர் களின் வாழ்க்கை குறிப்பு மற்றும் புதிய முகவரி உள்ளடக்கிய நூல் வெளி யிடப்படுகின்றது. buy Ampicillin online இந் நூலில் இடம் பெற விரும்புவோர் இலக்கியக் கழக பொதுச் செயலா ளரை தொடர்பு கொள்ள லாம்.

மூன்று தினங்கள் நடை பெறும் காயல்பட் டின மாநாட்டில் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் குறித்து பட்டிமன்றம், கருத்தரங் கம், சன்மார்க்க அரங்கம், இசையரங்கம், மகளிர் அரங்கம், ஆய்வரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. இம் மாநாடு சம்பந்தமாக இலக் கியக் கழக பொதுச் செய லாளர் பேராசிரியர் மு சாயபு மரைக்காயர் 8, தம்பி சாயபு மரைக்காயர் வீதி, காரைக்கால் – 609 602, அலைபேசி – 98424 88047, காயல் எஸ்.இ. அமானுல் லாஹ் 484, நெய்னா தெரு, காயல்பட்டினம் – 628204, அலைபேசி – 9443342222 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

இம் மாநாடு சம்பந்த மான ஆலோசனை கூட் டம் 7-5-2011 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு காயல் பட்டினம், சதுக்கை தெரு, ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லி ஸில் வைத்து நடை பெறுகின்றது.

இக் கூட்டத்தில் இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் பேரா சிரியர் மு. சாயபு மரைக் காயர் பங்கேற்கிறார். நகரின் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், கல்வியாளர் கள், இலக்கிய ஆர்வலர்கள், நற்பணி மன்றங்களின் பொறுப்பாளர்கள் உள் ளிட்ட அனைவரும் இக் கூட்டத்தில் பங்கேற்று மாநாடு வெற்றிக்கான ஆலோசனை வழங்குகின்ற னர். இஸ்லாமிய தமிழ் இலக்கிய பதினைந்தாம் மாநாடு பணிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மணிச்சுடர் நாளிதழ் செய்தி ஆசிரியர் காயல் மகபூப் உள்ளிட் டோர் முனைப்போடு செய்து வருகின்றனர்.

Add Comment