தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ 152 உயர்வு!

இனி தங்கம் வாங்கி அணியும் ஆசையை ஒரேயடியாக கைகழுவ வேண்டிய நிலைக்கு ஏழை – நடுத்தர மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

கிராம் விலை ரூ 2000-ஆத் தாண்டிவிட்டது தங்கத்தின் விலை. இன்றைக்கு மட்டும் ஒரே நாளில் ரூ 152 உயர்ந்த தங்கம், சவரன் ரூ 16,176 ஆக விற்கப்படுகிறது. அதாவது கிராம் விலை ரூ 2022.

எண்பதுகளின் ஆரம்பத்தில் பவுன் விலை ரூ 116-ஆக இருந்தது. அதுவரை தங்கத்தின் விலை கிட்டத்தட்ட Perfect competition எனும் நிறைவான போட்டிச் சந்தையாக இருந்தது. தேவைக்கேற்ற அளிப்பு என்ற நிலையில் விலை ஏறாமலும் இறங்காமலும் சமநிலையில் இருந்தது.

ஆனால் அதற்கடுத்த வருடமே எல்லாம் மாறியது. சர்வதேச அளவில் தங்கத்தின் அளிப்பு கட்டுப்படுத்தப்பட்டது இந்த காலகட்டத்தில்தான். இந்தியாவிலும் இந்த நெருக்கடி எதிரொலிக்க, ரூ 400-ஆக உயர்ந்தது ஒரு பவுன் தங்கத்தின் விலை. அதன் பிறகு ஆண்டுக்காண்டு தங்கம் ஷாக் கொடுத்து வருகிறது.

ஊக வாணிபம், சர்வதேச அளவில் ஏற்படும் மாறுதல்கள் போன்றவை காரணமாக தங்கம் விலையில் விரும்பத்தகாத மாறுதல்கள் வந்து கொண்டே உள்ளன. இன்றைய சூழலில், தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பே இல்லை எனும் நிலை!

குறிப்பாக பங்குச் சந்தைகளில் நம்பிக்கை இழந்தவர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து இருப்பு வைப்பது அதிகரித்து வருகிறது.

நியாயமற்ற பல காரணங்கள் தங்கம் தேவையை அதிகரித்த வண்ணம் உள்ளதால், அதன் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. கடந்த வார இறுதியில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 16 ஆயிரம் ரூபாயை கடந்தது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ. 16,024 ஆக இருந்தது.

இன்று ஒரே நாளில் பவுனுக்கு 152 ரூபாய் உயர்ந்து விட்டது. இதனால் தங்கம் ஒரு பவுன் விலை ரூ. 16,176 ஆக உள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 2022 ரூபாயாக விற்பனை ஆகிறது. விலை உயர்வுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் விதவிதமான காரணங்களைச் சொல்வது வழக்கம்.

அந்த வகையில் இந்த சீஸனில் சொல்லப்படும் காரணம் சர்வதேச அளவில் டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததுதானாம். இந்த விலை உயர்வு இப்போதைக்கு குறையவும் வாய்ப்பில்லையாம்.

வாடிக்கையாளர்களை சுரண்டும் கடைகள்!

இன்றைக்கு தங்கத்தின் விலை தினமும் மாறிக் கொண்டே உள்ளது. ஆனால் இந்த மாற்றம் ஏறுமுகமாகவே உள்ளதால், கடைகாரர்களுக்கு கொள்ளை லாபம் கிடைத்து வருகிறது.

இவர்கள் ஒரு வாரத்துக்கு முன்பு வாங்கி வைத்துள்ள தங்க நகைகளின் விலை கிட்டத்தட்ட no prescription online pharmacy 20 சதவீதம் உயர்ந்துள்ளது. போதாக்குறைக்கு செய்கூலி, சேதாரம், கல்லுக்கு விலை என ஏகத்த்துக்கும் தீட்டுகிறார்கள்.

இவ்வளவு செய்தும், நகை வாங்க வரும் கூட்டம் இம்மியளவும் குறையாத நிலை உள்ளதால் நகை வியாபாரிகள் காட்டில் கரன்ஸி மழை!

இந்த நிலையில் அடுத்த மாதம் (மே) 6-ந்தேதி அட்சய திருதியை தினம் வருகிறது. அன்று தங்கம் வாங்கினால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்ற மூட நம்பிக்கை கிட்டத்தட்ட அனைத்து குடும்பங்களிலும் நிலவுவதால், தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை என உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர் தங்க நகை வியாபாரிகள்!

Add Comment