டி.வி. யை அணைத்தேன்…… மகளை ‘ஜீனியஸ்’ ஆக்கினேன்

‘ மகள் டி. வி. பார்க்கும் நேரத்தைக் கண்டிப்போடு குறைத்ததால் அவள் புத்திசாலி ஆகியிருக்கிறாள்’ என்கிறார், இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்மணி மேகி ஆல்டர்சன். அவர் மேலும் கூறும்போது, “பாப் பாடகி மடோன்னா ஒருமுறை தான் தனது குழந்தைகளை டி.வி. பார்க்க விடுவதில்லை என்று பேட்டியில் கூறியதைப் பார்த்தபோது, ரொம்பத்தான் ‘பந்தா’ பண்ணுகிறார் என்று நினைத்தேன். உண்மையில் டி.வி.யில் வரும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவை மேம்படுத்தத்தான் செய்யும் என்று கருதினேன்.

எனது மகள் பெக்கி, சிலமாதக் குழந்தையாகவே டிவி யில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டால். ஒரு வயதில் இருந்தே அவள் சரியாகத் தூங்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய அரசு வெளியிட்ட ஓர் எச்சரிக்கையைப் படித்தபின்புதான் நான் அபாயத்தை உணர்ந்தேன். அதில், இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தையை டி.வி. பார்க்க அனுமதிக்கக்கூடாது. 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை தினசரி ஒரு மணி நேரம் மட்டும்தான் டிவி பார்க்க விட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்கள்.

அப்போது பள்ளி செல்லத் தொடங்கியிருந்த பெக்கி அங்கு சிறப்பாகச் செயல்பட முடியவில்லை என்பதை உணர்ந்தேன். Doxycycline online அவளுக்குக் கவனக் குறைவு பிரச்சினை இருப்பதை ஆசிரியைகள் தெரிவித்தனர். நான், பெக்கி டி.வி. பார்க்கும் நேரத்தை கவனத்தோடு வெகுவாகக் குறைத்தேன். நானும் எனது ‘லேப்டாப்’பை அணைத்துவிட்டு பெக்கியுடன் நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தேன். தற்போது அவள் பள்ளியிலும், வீட்டிலும் பிரகாசமான குழந்தையாக மாறி வருகிறாள்!” என்கிறார் மேகி. அப்பா நீங்க?

( தினத்தந்தி 12 – 03 – 2011 )

சகோதரர்களே! தயவு செய்து இதை சிந்தித்து பாருங்கள். இஸ்லாம் அல்லாதவர்கள் டிவி உடைய வீரியம் தெரிந்திருக்கிறார்கள். முக்கியமாக நாம்தான் தெரிய வேண்டும். நமது இஸ்லாத்தை சீர்குழைக்க அதுவும் ஒரு முக்கிய காரணம். நமது வீடுகளில் உள்ள டிவி (கேபிள்) சேனல்களை ஒழித்து கட்ட எத்துனை பேர் முன் வருவோம். அந்த தைரியம் நம்மில் உண்டா.?

Add Comment