கடையநல்லூரில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை பொதுமக்கள் அவதி

கடையநல்லூர் பகுதியில் முன்னறிவிப்பின்றி அதிகமாக காணப்படும் மின்தடையினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடையநல்லூர் பகுதியில் மின்தடை சுழற்சி நேரம் இரண்டு மணி நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக மின்தடை நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை காணப்பட்டு வருகிறது. அறிவிக்கப்பட்ட மின்தடை சுழற்சி நேரத்தை காட்டிலும் மின்தடை அதிகமாக நிலவி வரும் நிலையில் இரவு நேரங்களிலும் அவ்வப்போது 20 நிமிடத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது.

Levitra online style=”text-align: justify;”>தேர்தலுக்கு முன்பாக மின்தடை நேரம் சுமார் 3 மணி நேரம் இருந்தது. ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பின் மின்தடை நேரம் அதிகரித்து காணப்படுவதாக மின் உபயோகிப்பாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதனிடையில் அதிகமாக நிலவி வரும் மின்தடை காரணமாக ஓடல்களில் இட்லி, தோசை, வடைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கோதுமை மாவு, கேப்பை மாவு, ரவா தோசைகள் அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. மேலும் மின்தடை காரணமாக கடையநல்லூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் அதிகளவில் ஏற்படக்கூடிய நிலை உருவாகி வருகிறது. மின்தடையால் தொழிற்சாலைகளும் பாதிப்படைந்துள்ளன.

Add Comment