தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே பிளஸ் 2 ரிசல்ட் தேதி பற்றிய அறிவிப்பு-தேர்வுத்துறை அதிகாரி தகவல்

‘பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்னும் முடியவில்லை. முக்கிய பாடங்கள் மட்டுமே திருத்தி முடிக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மையங்களில் திருத்தும் பணி நடக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகே, பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிக்கப்படும்’ என்று கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி 43 மையங்களில் நடந்தது. தேர்தல் பணிகளுக்கு இடையே மீண்டும் கடந்த வாரம் தொடங்கிய பணி தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது. குறிப்பாக டம்மி எண்கள் போடப்பட்ட பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் கடந்த வாரம் முடிந்தது. மொழித்தாள்கள் அதிகம் உள்ளதால் இன்னும் அந்த பணி தொடர்கிறது. 

நேற்று தமிழ் பாடத்தின் விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தி முடிக்கப்பட்டு, அந்த பாட ஆசிரியர்கள் இன்று பள்ளிப் பணிக்கு திரும்புகின்றனர். இந்நிலையில், ஆங்கிலம், வணிகவியல் மற்றும் தொழில் கல்வி பாடங்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி சில மையங்களில் நடக்கிறது. இந்த வாரத்தில் அந்த பணிகள் முடிந்துவிடும்.

டம்மி எண்கள் போடப்பட்ட பாடங்களின் மதிப்பெண்கள் தேர்வுத்துறைக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றை உண்மையான பதிவு எண்களுக்கு மாற்றும் பணி நடக்கிறது. இதன் பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டருக்கு அனுப்பி வைப்பார்கள். அங்கு மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணி நடக்கும். பின்னர் மதிப்பெண் பட்டியல்கள் அச்சிடும் பணி தொடங்கும். மேற்கண்ட பணிகள் முடிய 10 நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. 

இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 

இன்னும் Buy Cialis சில மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. திருத்தி முடித்த பாடங்களின் மதிப்பெண்கள் அனைத்தும், கண்காணிப்பாளர்கள் மூலம் தேர்வுத் துறைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு மதிப்பெண்களை சரிபார்த்து, ஒவ்வொரு மாணவரும் எழுதிய பாடங்களின் மதிப்பெண்கள் தொகுக்க வேண்டும். பின்னர் மதிப்பெண் பட்டியல் தயாரிக்க வேண்டியுள்ளது. 

சுமார் 8 லட்சம் மாணவர்களின் மதிப்பெண்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. இந்த பணிகள் தற்போது நடப்பதால் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மேலும், தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13ல் வெளியாகிறது. அதற்குப் பிறகே பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் தேதி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அதிகாரி கூறினார்.
Anwar Hussain

Add Comment