ஏப்.21ல் வேலைவாய்ப்பு முகாம் நெல்லை அண்ணா பல்கலை.யில் துணைவேந்தர் ராஜாராம் பேட்டி

நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் நெல்லையில் வரும் 21ம் தேதி நடக்கிறது. நான்கு மாவட்டங்களில் 42 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

இதுதொடர்பாக நெல்லை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜாராம் நிருபர்களிடம் கூறியதாவது:

நெல்லை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ம் தேதி நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் இந்த முகாமிற்கு மாணவ, மாணவிகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ, எம்பிஏ, பிஎஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியியல்), பிசிஏ படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டு இறுதி ஆண்டு படிப்பவர்களும், கடந்த ஆண்டு இறுதியாண்டு முடித்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம். இதற்கு பதிவு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும்.

இதில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிபிஓ நிறுவனங்களுக்கு மட்டும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள், ஒன்று அல்லது இரண்டு பாடங்கள் தவிர அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

இந்த முகாமில் ஐபிஎம், எம்பிஎல் போர்டு, விப்ரோ, டிவிஎஸ் டயர்ஸ், யுரேகா போர்ப்ஸ் உள்ளிட்ட 21 நிறுவனங்கள் Buy Ampicillin கலந்து கொண்டு தகுதியானவர்களை தேர்வு செய்கின்றன. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 42 கல்லூரிகளைச் சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் சசிக்குமார் (செல் 94878 28555), ராஜ்குமார் (98943 & 07215) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Anwar Hussain

Add Comment