கன மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர்… சுற்றுலா பயணிகள் “குஷி’

கன மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.குற்றாலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழை பெய்யாததால் இரண்டு மாத காலமாக அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாமல் இருந்தது. மெயின் அருவி, பழையகுற்றால அருவி, சிற்றருவி, புலியருவி, ஐந்தருவி தண்ணீர் இன்றி வெறும் பாறை மட்டும் காட்சி அளித்தது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை நின்றது. ஒருசிலர் அருவிகளில் Buy Bactrim தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.செண்பகாதேவி அருவியில் சிறிதளவு தண்ணீர் விழுந்தது. அங்கு ஒரு சிலர் மட்டும் சென்று குளித்தனர். கோடை வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் நீர்நிலைகளை நாடி செல்வது வழக்கம். தற்போது கோடை வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த போதிலும் அருவிகளில் தண்ணீர் இல்லாததால் அருவி பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.வரும் ஜூன் மாதம் சீசன் துவங்கும்.

அப்போதுதான் சுற்றுலா பயணிகளின் வருகையும் இருக்கும். இந்நிலையில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் குற்றாலம் மலை பகுதியில் கன மழை பெய்தது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் கன மழை நீடித்ததால் மாலை 6 மணிக்கு செண்பகாதேவி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து ஒரு மணி நேரத்தில் மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி சீறி பாய்ந்தது. அருவியில் கற்கள், மரக்கிளைகள் வந்து விழுந்ததால் உடனடியாக அருவியில் யாரும் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இரவு குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் சிலர் கற்களை பொருட்படுத்தாது அருவியின் ஓரமாக நின்று குளித்து மகிழ்ந்தனர். ஆண்கள் குளிக்க அனுமதிக்கும் பகுதியின் ஓரமாக ஆண்களும், பெண்களும் நின்று குளித்தனர். அருவியின் மைய பகுதியில் அதிகமான கற்கள் விழுந்தன. மேலும் தண்ணீரும் கலங்கலாகவே விழுந்தது. கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டதை அடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். சிற்றருவி, புலியருவி, ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மேலும் உற்சாகமடைந்தனர்.

Add Comment