தென்காசியில் ரயில்வே மேம்பாலம் பணி தீவிரம்-சர்வீஸ் சாலை பணி இழுத்தடிப்பு

தென்காசியில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 80 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் வருவாய்த்துறையின் காலதாமதம் காரணமாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி இன்னும் துவங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. 

தென்காசி மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை யான ரயில்வே மேம்பாலப் பணி கருப்பசாமி பாண்டி யன் எம்.எல்.ஏ. முயற்சியால் விரைவாக நடந்துவருகிறது. 740 மீட்டர் நீளத்தில் இரண்டு பக்க இணைப்பு சாலைகளுடன் சேர்த்து 26 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்படுகிறது. தூண்களுக்கு மேல் மொத்தம் 20 டெக்குகள் அமைக்கப்படுகின்றன. இதில் ஒரு டெக் ரயில்வே நிர்வாகத்தின் சார்பிலும், 19 டெக்குகள் நெடுஞ்சாலைத்துறையின் சார்பிலும் அமைக்கப்படுகின்றன. நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் 19 டெக்குகளின் கட்டுமான பணி களும் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. 

பாலத்தின் கட்டுமான பணிகளை முடிக்க ஜூன் மாதம் வரை அவகாசம் உள்ள நிலையில் கட்டுமான நிறுவனத்தினர் சட்டமன்ற உறுதிமொழிக்குழுவிடம் கூறியது போன்று ஏப்ரல் மாதத்திலேயே பாலம் கட்டுமான பணிகளை முடிக்கும் நிலையில் உள்ள னர். கட்டுமான பணிகளுக்கு நேர் மாறாக சர்வீஸ் சாலை அமைக்கும் பணி இன்னும் துவங்கவே இல்லை என்பதுடன் வருவாய்த்துறையினரின் அலட்சியம் காரணமாக நிலம் கையகப்படுத்தும் பணி கூட துவங்கவில்லை என்பது வேதனையான விஷயம். 

பாலம் விஷயத்தில் மாவட்ட வருவாய்த்துறை யின் செயல்பாடு அந்ததுறையின் மீது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டி களுக்கும் மிகுந்த buy Doxycycline online அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. வீணான காலதாமதம், நிலம் கையகப்படுத்துவதில் ஒரு சார்பான நிலை, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊகங்களுக்கு இடமளிப்பதாக உள்ளது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே பணிகளை துவக்குவது வழக்கமாக உள்ள நிலையில் பணிகள் நிறைவடையும் தருவாயை எட்டிய பின்னரும் நிலம் கையகப்படுத்தாமல் வருவாய்த்துறையினர் அலட்சியம் காட்டி வருவது பாலத்தின் நோக்கத்தை சீர்குலைப்பதாக உள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.

Add Comment