மே இறுதி வரை இடமில்லை தென்மாவட்ட ரயில்கள் ‘ஹவுஸ்புல்’-சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா?

online pharmacy without prescription justify;”>கோடை விடுமுறையால் தென்மாவட்டங்களுக்கு வரும் ரயில்களில் முன் பதிவு டிக்கெட்கள் அனைத்து காலியாகி விட்டன. இதனால் வெளியூர்களில் வசதிப்பவர்கள் ஊருக்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. 

ரயில் பயணம் பாது காப்பு மற்றும் வசதியாக இருப்பதால் அதில் பயணிக்கவே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். இதனால் விழா மற்றும் விடுமுறை நாட்கள் மட்டுமல்லாமல் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் அனைத்து ரயில்களிலும் எந்நாளும் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றன. 

இந்நிலையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து விட்டன. தொடர்ந்து 6ம் வகுப்பிலிருந்து 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நாளையுடன் தேர்வுகள் நிறைவடைகிறது. மேலும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிப்பவர்க ளுக்கு இம் மாத இறுதியில் தேர்வு நடத்தப்படுகிறது. 

கோடை விடுமுறைக் காக உறவினர்கள் வீடுகளுக்கும் சுற்றுலா தலங்க ளுக்கும் செல் வது வழக்கம். இத னால் இப்போதே ரயில், பஸ்களில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்படுகிறது. இதற்கிடையில் வெளியூர்களில் தங்கி படிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளும் அங்கு வேலை பார்க்கும் ஆசிரியர், ஆசிரியைகளும் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கொண்டாட நாளை முதல் வர திட்டமிட்டுள்ளனர். இதனால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு வரும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்கள் ஏற்கனவே காலியாகி விட்டன. 

டிக்கெட் கிடைக்காதவர் கள் தட்கல் முறையி லும் டிக்கெட் களை முன் பதிவு செய்துள்ளனர். இருப்பினும் பலருக்கு டிக் கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது. 

ஏப். 21ம் தேதிக்கு பிறகு மே மாதம் முழுவதும் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு டிக்கெட்கள் காலியாக இல்லை. இதே போல் ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் துவங்கப்படுவதால் அந்த மாதத்திலும் தென்மாவட்டங்களிலிருந்து சென்னை செல்லும் ரயில்களில் தற்போதே டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ரயில்களில் இடமில்லாததால் பஸ்களில் டிக்கெட்களை பெற மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். 

பெரும்பாலான அரசு பஸ்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிவடைந்து விட்டன. இத னால் தனியார் பஸ்களையே வெளியூர்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் நம்பியுள்ளனர். வழக்கமாக தெற்கு ரயில்வேயிலிருந்து பயணிகள் வசதிக்காக கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். 

இந்த ரயில் களை பள்ளி விடுமுறை முடிந்து வருபவர்களின் வசதிக்கு ஏற்ப அறிவிக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பு. அதோடு மீண்டும் பள்ளி மற்றும் பணிக்கு திரும்ப வசதியாகவும் தென்மாவட்டங்களிலிருந்தும் வெளியூர்களுக்கு செல்ல பயணிகளின் தேவைக்கு ஏற்ப ரயில், பஸ்களை இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

– Anwar Hussain

Add Comment