அர்ஜென்டினா அமர்க்கள ஆரம்பம்: நைஜீரியாவை வீழ்த்தியது

உலக கோப்பை தொடரை அர்ஜென்டினா அணி வெற்றியுடன் துவக்கியது. நேற்று நடந்த பரபரப்பான லீக் போட்டியில் நைஜீரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள எல்லிஸ் பார்க் மைதானத்தில் நடந்த “பி’ பிரிவு லீக் போட்டியில் அர்ஜென்டினா, நைஜீரிய அணிகள் மோதின. கடந்த 1994, உலக கோப்பை தொடரில் ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய மாரடோனா நீக்கப்பட்டார். சுமார் 16 ஆண்டுகளுக்கு பின் தற்போது அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக உலக கோப்பை தொடரில் பங்கேற்றார்.

இரண்டு முறை உலக சாம்பயினான அர்ஜென்டினா அணி, எடுத்த எடுப்பிலேயே அசத்தியது. 4வது நிமிடத்தில் நட்சத்திர வீரரான மெஸ்சி அடித்த பந்து கோல் போஸ்டுக்கு மேலே பறந்தது. 6வது நிமடத்தில் “கார்னர்’ வாய்ப்பு கிடைத்தது. பந்தை வெரான் அருமையாக அடித்தார். இதனை பெற்ற காபிரியல் ஹெயின்ஸ், அப்படியே தலையால் முட்டி சூப்பராக கோல் அடிக்க, அர்ஜென்டினா ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பின் 37வது நிமிடத்தில் மெஸ்சி அடித்த பந்தை no prescription online pharmacy நைஜீரீய கோல்கீப்பர் எனியாமா அபாரமாக தடுத்தார். 43வது நிமிடத்தில் கிடைத்த “பிரீகிக்’ வாய்ப்பையும் மெஸ்சி வீணாக்கினார். இதையடுத்து முதல் பாதியில் அர்ஜென்டினா 1-0 என்ற முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் அர்ஜென்டினா வீரர்களின் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. தங்கள் பகுதியிலேயே விளையாடி வெறுப்பேற்றினர். மறுபக்கம் நைஜீரிய வீரர்கள் தாக்குதல் பாணியிலான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 64வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் டெவேஸ் மின்னல் வேகத்தில் பந்தை கொண்டு சென்றார். இவர், மெஸ்சிக்கு “பாஸ்’ செய்தார். இம்முறையும் மெஸ்சி ஏமாற்றினார். 70வது நிமிடத்தில் நைஜீரியாவின் தைவோ அடித்த பந்து, கோல் போஸ்டில் இருந்து நூலிழையில் விலகிச் சென்றது. 81வது நிமிடத்தில் மீண்டும் மெஸ்சி தாக்குதல் நடத்தினார். இம்முறையும் துடிப்பாக செயல்பட்ட நைஜீரிய கீப்பர் எனியாமா அருமையாக தடுத்தார். 83வது நிமிடத்தில் மற்றொரு நைஜீரிய வீரர் உச்சே அடித்த பந்து கோல் போஸ்டுக்கு மேலே செல்ல, வாய்ப்பு வீணானது. இறுதியில் அர்ஜென்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று, 3 புள்ளிகளை முழுமையாக பெற்றது.

கடந்த 1986ல் அர்ஜென்டினா அணிக்கு கேப்டனாக கோப்பை பெற்று தந்த மாரடோனோ, இம்முறை பயிற்சியாளராக முதல் போட்டியில் வெற்றி கண்டுள்ளார்.

Add Comment