கடையநல்லூரில் கல்லூரி மாணவி தற்கொலை-தாயிடம் போலீசார் விசாரணை

கடையநல்லூர் கல்லூரி மாணவி தற்கொலையில் அவரது தாயிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சுப்பையா பாண்டியன் மகள் பத்மினி(18). இவர் கடையநல்லூர் அருகேயுள்ள பொறியில் கல்லூரியில் பி.இ. முதலமாண்டு படித்து வந்தார்.  

இந்நிலையில் பத்மினி கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்தபோது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.  

தினசரி கல்லூரியில் இருந்து தாமதமாக வருவதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த பத்மினி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.  

இந்நிலையில் பத்மினியின் தாய் செண்பகவள்ளி மகளின் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்ததாக கடையநல்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Buy cheap Bactrim style=”text-align: justify;”>– Anwar Hussain

Add Comment