பி.இ கவுன்சலிங் எப்போது தொடங்கும்?

பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சலிங் ஜூன் 25ம் தேதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Buy cheap Viagra style=”text-align: justify;”>அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த நாள் முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். ஜூன் 20ம் தேதி ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். ஜூன் 25ம் தேதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் கவுன்சலிங் தொடங்கும். 40 நாட்கள் கவுன்சலிங் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

ஒரு விண்ணப்பத்தின் விலை 500. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 250. ஆன்லைனிலும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படும்.

இந்த ஆண்டு 486 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ளன. எனவே, விண்ணப்பிக்கும் அனைவருக்கும் கட்டாயம் இடம் கிடைக்கும்.

இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

Add Comment