ஒரே டிராக்கில் பயணம் அனந்தபுரி & கோவை ரயில்கள் விபத்திலிருந்து நொடியில் தப்பின-நெல்லை அருகே பரபரப்பு

திருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு தாமதமாக நெல்லைக்கு Lasix No Prescription வரும் என அறிவிக்கப்பட் டது. இதற்கான காரணம் குறித்து விசாரித்த போது பெரும் விபத்திலிருந்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மயிரிழை யில் தப்பிய விவரம் தெரிய வந்தது. 

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நெல்லையை அடுத்த செங் குளம் ரயில் நிலையம் அருகே நேற்று மாலை 6.50 மணியளவில் வந்து சிக்னலுக்காக நிறுத்தப்பட்டது. அதே நேரம் கோவையிலிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பயணிகள் ரயில் நெல்லையிலிருந்து நேற்று இரவு 7 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் செங்குளத்தில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் நின்ற தண்டவாளத்தில் சென்றது. 

இதனால் இரு ரயில்களி லும் பயணம் செய்த பயணி கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த ரயில்வே ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பாயின்ட் மாற்றியதன் விளைவாக கோவை ரயில் வேறொரு டிராக்கில் நாகர்கோவில் சென்றது. இதனால் மயிரிழையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதன்பிறகு ஒரு மணி நேரம் தாமதமாக அனந்தபுரி எக்ஸ்பிரஸ் செங்குளத்திலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு நெல்லை வந்து சென்னை சென்றது. 

2 ரயில்கள் ஒரே டிராக் கில் சென்ற தகவலை மூடி மறைப்பதில் ஊழியர்கள் சிலர் குறியாக இருந்தனர். ரயில்வே வட்டாரத்தில் விசாரித்த போது சிக்னல் கோளாறு காரண மாக இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறி சமாளித்தனர்.

– Anwar Hussain

Add Comment