யூசுப் பதான் அதிரடி: இந்தியா வெற்றி: வீழ்ந்தது ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே Buy cheap Cialis அணிக்கு எதிரான முதல் “டுவென்டி-20′ போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. யூசுப் பதானின் அதிரடி ஆட்டம், இந்திய வெற்றிக்கு கைகொடுத்தது.

இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடர் ஜிம்பாப்வேயில் நடக்கிறது. நேற்று ஹராரேயில் முதல் போட்டி நடந்தது. “டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங் தேர்வு செய்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு, மசகட்சா, பிரண்டன் டெய்லர் துவக்கம் தந்தனர். வினய் குமார் பந்து வீச்சில் அனல் பறந்தது. இவரது வேகத்தில் மசகட்சா (1) பிரண்டன் டெய்லர் (15) ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய சிபாபா, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தைபு (4) ஏமாற்றினார். 5 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 40 ரன்கள் சேர்த்து வெளியேறினார் சிபாபா. மிடில் ஆர்டரில் கேப்டன் சிகும்பரா (3), லேம்ப் (0) இருவரும், பிரக்யான் ஓஜா சுழலில் விரைவில் பெவிலியன் திரும்பினர். சற்று நேரம் தாக்குப் பிடித்த ஆடிய, எர்வின் 30 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். பின்வரிசையில் உட்சேயா (6), பிரைஸ் (2) சொதப்ப, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே அணி, 111 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் வினய் குமார் 3, டின்டா, பிரக்யான் ஓஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணி துவக்கத்தில் திணறியது. முரளி விஜய்(5) மீண்டும் ஏமாற்றினார். நமன் ஓஜாவும் (2) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் ரெய்னா, ரெயின்ஸ்போர்டு பந்து வீச்சில் “ஹாட்ரிக் பவுண்டரி’ அடித்தார். இவர் 28 ரன்களுக்கு (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட்டானார். ரோகித் சர்மா (10) ரன் அவுட்டானார்.

யூசுப் விளாசல்:
பின்னர் இணைந்த யூசுப் பதான், விராத் கோஹ்லி ஜோடி, ஜிம்பாப்வே பந்து வீச்சை விளாசியது. 5 வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 64 ரன்கள் சேர்க்க, 15 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 112 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஜிம்பாப்வேயிடம் ஒரு நாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்தது. யூசுப் பதான் 36 (3 சிக்சர், 2 பவுண்டரி), கோஹ்லி 27 (3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.

ஆட்ட நாயகன் விருதை யூசுப் பதான் கைப்பற்றினார். இவ்வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட “டுவென்டி-20′ தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று ஹராரேயில் நடக்க உள்ளது.

Add Comment