ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் ஒரு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் எண்ணப்படும்

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பார்வையாளரை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பின்னரே ஒவ்வொரு சுற்றின் முடிவையும் அறிவிக்க முடியும் என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாக பல மணி நேரம் தாமதமாகும் என்று தெரிகிறது.

தமிழக சட்டசபைக்கு கடந்த 13ம் தேதி நடந்த தேர்தலில் 78 சதவீத வாக்குகள் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது. 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 91 மையங்களில் வைத்து எண்ணப்படவுள்ளன. இந்த மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் ஒரு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த தேர்தல்களில் ஓட்டு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்றாக முடிய, முடிய அதன் விபரம் உடனடியாக வெளியிடப்பட்டு விடும். இதனால் உடனடியாக முன்னணி நிலவரம் தெரிந்து விடும். ஆனால் இந்த முறை ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், தேர்தல் பார்வையாளரிடம் தெரிவிக்கப்படும். அவர் ஒப்புதல் கொடுத்த பிறகே, ஓட்டு-முன்னிலை விபரத்தை வெளியிட முடியும். இதனால் முன்னிலை நிலவரம் தெரியவர தாமதமாகும்.

ஒவ்வொரு தொகுதி ஓட்டுக்களும் தலா 14 மேஜைகளில் மீது வைத்து எண்ணப்படவுள்ளன. 14 மேஜைகளில் உள்ள அனைத்து மின்னணு வாக்கு எந்திரங்களின் ஓட்டுக்களும் எண்ணி முடித்த பிறகே அந்த சுற்று ஓட்டு விபரத்தை பார்வையாளர் வெளியிடுவார். இந்த புதிய நடைமுறையால் ஓட்டு முன்னணி விபரம் வெளியாவதில் தாமதம் buy Viagra online ஏற்பட உள்ளது.

தேர்தல் பார்வையாளர் ஒப்புதல் கொடுக்காமல் அடுத்த சுற்று ஓட்டுக்களை எண்ண முடியாது என்பதால் மே 13ம் தேதி பிற்பகலுக்குப் பிறகே தெளிவான நிலை தெரியவரும்.

Add Comment