பாஹாஹீல் IGC-யில் (குவைத்) ஏற்பாடு செய்யப்பட்ட அரபி மொழி பயிற்சி வகுப்பு

அரபு நாடுகளில் பணிபுரியும் தமிழ் சகோதர சகோதரிகள் அரபு மொழி தெரியாததன் விளைவாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை ஏற்படுவதை கவனத்தில் கொண்டும், Buy cheap Doxycycline திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை முறையாக அணுக வழிவகை செய்யும் நோக்குடனும், அரபி மொழியை இலக்கணத்துடன், முறையாக கற்றுக்கொள்வதற்காக IGC-யின் சார்பாக அரபி மொழி இலக்கண பயிற்சி வகுப்பு  பாஹாஹீல் மர்கஸில் ஏற்பாடு செய்யப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் முறைபடுத்தப்பட்ட பாடத்திட்டத்துடன் செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் இந்த தொடர் பயிற்சியின் முதல் வகுப்பு 19.04.2011 அன்று இனிதே தொடங்கியது.
வகுப்பை IGC-யின் பாஹாஹீல் மர்கஸில் “தா’ஈ”யாக பணிபுரியும் மௌலவி ஹாபிழ் செய்து அலி பாகவி அவர்கள் நடத்தினார்கள். அது சமயம், அரபி எழுத்துக்கள் (Alphabets, Vouwels), பேச்சின் பகுதிகள் (Parts of speech), சுட்டு வார்த்தைகள், Definite & Indefinite, பெயர்ச்சொற்கள், nomitive case, object / accusative case, genetive case போன்ற பகுதிகள் விரிவாகவும் விளக்கமாகவும் நடத்தப்பட்டன.
தொடர் வகுப்பு என்பதால் மிகவும் குறைந்த நபர்களே அதுவும் முன்பதிவு செய்து கொண்டவர்களே அனுமதி வழங்கப்படும் என்ற நிலை இருந்த போதும் பல சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதால் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பெண்களும் ஆர்வத்துடன் இந்த வகுப்பில் பங்கு கொண்டமை இவ்வகுப்பின் சிறப்பம்சம் ஆகும். அவர்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு வகுப்பு நேரலை செய்யப்பட்டது.

Add Comment