சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் இணைய தளத்தில் வெளியானது

சமச்சீர் கல்வி 10-ம் வகுப்பு பாடத் திட்டம் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.   1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத் திட்டம் வருகிற கல்வி ஆண்டில் முழு மையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அனைவரும் இனிமேல் ஒரே பாடத்திட்டத்தை படிக்கின்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தில் 10-ம்வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் தயாராக உள்ளன. மாணவ-மாணவிகள் இப்போதே சமச்சீர் பாடப்புத்தகங்கள் கேட்டு அலைகிறார்கள்.   மே மாதம் இறுதியில் தான் சமச்சீர் Buy cheap Amoxil பாட புத்தகங்கள் விற் பனைக்கு வழங்க தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனாலும் 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை மட்டும் இணைய தளத்தில் வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
இன்று காலையில் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் 10-ம் வகுப்பு புத்தகங்கள் முழுவதும் வெளியிடப்பட்டன. மாணவர்கள் வசதிக்காக தமிழ் வழி பாடப் புத்தகங்களும், ஆங்கில வழி பாடப்புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், அறிவியல், கணிதம் ஆகிய 5 பாடப்புத்தகங்கள் பள்ளிக் கல்வி இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

Add Comment