தென்காசி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகை பறிப்பு-மீட்ட டிரைவர், கண்டக்டருக்கு பாராட்டு

தென்காசி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் நகையை பறித்துக்கொண்டு வாலிபர் ஓடினர். டிரைவரும், கண்டக்டரும் விரட்டியதால் நகையை வீசி விட்டு அவர் தப்பினர். டிரைவரையும், கண்டக்டரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

புளியங்குடி அரசு பஸ் டெப்போவில் இருந்து தென்காசி& சேர்ந்தமரத்திற்கு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்றுமுன்தினம் பஸ்சை கோவில்பட்டியைச் சேர்ந்த ஜோதிமுருகன் ஓட்டினார். கண்டக்டராக அதே ஊரைச் சேர்ந்த சந்திரசேகரன் இருந்தார். இரவு கடைசி ட்ரிப்பை முடித்து விட்டு 15 பயணிகளுடன் பஸ் டெப்போவிற்கு புறப்பட்டது.

தென்காசி& குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள வேகத்தடை அருகே பஸ் வந்த போது பின்சீட்டில் இருந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் அணிந்திருந்த 7 பவுன் செயினை, வாலிபர் ஒருவர் பறித்துக் கொண்டு கீழே குதித்து ஓடினார்.

அந்த பெண் சத்தம் போடவே டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை நிறுத்திவிட்டு அந்த வாலிபரை துரத்தினர். இதனால் அவர் செயினை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டார். அந்த வழியாக பைக்கில் வந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் உதவியுடன் நகையை மீட்டு பெண்ணிடம் ஒப்படைத்தனர். மேலும் பஸ்சுக்குள் கிடந்த தாலியும் மீட்கப்பட்டது.

உயிரை Buy cheap Cialis பணயம் வைத்து நகையை மீட்ட டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் புளியங்குடி பஸ் டெப்போ மேலாளர் சுப்பிரமணியன், ஊழியர்கள் பாராட்டினர்.
Anwar Hussain

Add Comment