தென்காசி-நெல்லை அகலப்பாதை பணி தீவிரம்

தென்காசி&நெல்லை அகல ரயில் பாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தென்காசி முதல் நெல்லை வரை 71 கிலோமீட்டர் தொலைவிற்கான அகல ரயில் பாதை பணி நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கியது.

நிதி பற்றாக்குறை, சிலீப்பர் கட்டைகள் மற்றும் தண்டவாளம் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பாலம் கட்டுமான பணி மிகவும் மெதுவாக நடந்ததாலும் 2010ம் ஆண்டு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தற்போது பாலங்களின் கட்டுமான பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில் பிற பகுதிகளிலிருந்து தண்டவாளம் கொண்டு வரப்பட்டு சிலீப்பர் கட்டைகள் மற்றும் தண்டவாளம் விரிக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது.

2 ஆண்டுகளுக்கும் Buy Bactrim Online No Prescription மேலாக மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வரும் தென்காசி&திருநெல்வேலி அகலப் பாதை பணி நிறைவு கட்டத்தை எட்டுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Add Comment