பள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறையால் “குஷி’ எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி துவக்கம்

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (22ம் தேதி) முதல் கோடை விடுமுறை Cialis No Prescription விடப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமானது. நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று மேல்நிலை வகுப்புகளுக்கு நேற்று கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று (22ம் தேதி) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பிறகு வரும் ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்நிலையில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு நடுநிலைப் பள்ளிகளை பொறுத்தவரை நேற்று 8ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து 8ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இன்று (22ம் தேதி) முதல் விடுமுறை விடப்படுகிறது. 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு வரும் 29ம் தேதி வரை பள்ளிகள் செயல்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மற்றும் தனியார் துவக்கப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் இம்மாணவ, மாணவிகள் “குஷி’ அடைந்துள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்: இதற்கிடையில் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி நேற்று முதல் ஆரம்பமானது. மாவட்டத்தில் பாளை ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளி, தென்காசி மஞ்சம்மாள் பள்ளி, வி.கே புரம் அமலி பள்ளி ஆகிய 3 மையங்களில் நேற்று தலைமை தேர்வர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நாளை (23ம் தேதி) முதல் உதவி தேர்வர்கள் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.

Add Comment