குற்றால அருவிகளில் பரவலாக தண்ணீர்

குற்றாலத்தில் கோடைமழை காரணமாக அருவிகளில் பரவலாக தண்ணீர் விழத் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் Amoxil No Prescription பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கையின் எழிலோடு அமைந்துள்ள குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை காரணமாக செண்பகாதேவி அருவியில் பரவலாக தண்ணீர் விழத் துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்ட குற்றாலம் மெயின் அருவியில் பரவலாக தண்ணீர் விழத் துவங்கியுள்ளது. ஐந்தருவியின் 5 கிளைகளிலும் பரவலாக தண்ணீர் விழத் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து வருகின்றனர். குற்றாலம், செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது. குற்றாலத்தில் தற்போது அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வரத் துவங்கியுள்ளனர்.

Add Comment