கடையநல்லூர் மாணவி தற்கொலையில் திருப்பம்,சாவிற்கு காரணம் கள்ளக்காதலா?

கள்ளத் தொடர்பு குறித்து விஷயம் தெரிந்த மகளை கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி பெற்ற தாயே Buy Doxycycline எரித்து கொலை செய்த சம்பவம் கடையநல்லூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையநல்லூரை சேர்ந்தவர் சுப்பையா, செண்பகவள்ளி மகள் பத்மினி (17). தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த பத்மினியை அவரது தாய் செண்பகவள்ளி திட்டியதாகவும், இதனால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் மாணவி பத்மினி சாவில் சந்தேகம் இருப்பதாக கருதப்பட்டதை அடுத்து இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. விசாரணையில் பத்மினியை அவரது தாய் செண்பகவள்ளி கழுத்தை நெரித்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மாணவி பத்மினியின் தாய் செண்பகவள்ளிக்கும், போலீஸ் துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் உள்ள இருமன்குளத்தை சேர்ந்த சுந்தரையா என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்தது. இந்த விஷயம் மகள் பத்மினிக்கு தெரிய வரவே தாய்க்கும், பத்மினிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த தாய் செண்பகவள்ளி பத்மினியின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் பத்மினி மயங்கி விழுந்த நிலையில் மகள் மீது தாய் செண்பகவள்ளி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொளுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பெலிக்ஸ்பீட்டர் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு தாய் செண்பகவள்ளியை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இருமன்குளத்தை சேர்ந்த சுந்தரையாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Add Comment