வறண்டது அடவிநயினார் அணை

கடுமையான வறட்சியின் காரணமாக கடையநல்லூர் அருகேயுள்ள அடவிநயினார் அணை வறண்டு காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடையநல்லூர் அருகே அடவிநயினார் அணைக்கட்டு அமைந்துள்ளது. பருவ மழையின் போது காட்டுப் பகுதியில் இருந்து வரும் வெள்ளத்தை தடுத்து, அணைப்பகுதிக்கு தண்ணீரை வர செய்வது உண்டு. இந்த அணை 132 அடி கொள்ளளவு கொண்டது. மேட்டுக்கால், கரிசல்காலில் அமைந்துள்ள ஆற்று மதகுகளின்கீழ் அமைந்துள்ள 11 அணைக்கட்டு பாசனங்களுக்கும் தண்ணீர் அனுப்பபட்டு வருகிறது. அடவிநயினார் அணைக்கட்டு மூலம் 43 குளங்கள் பயன்பெற்று வருகின்றன.சுமார் 6 ஆயிரத்து 800 ஏக்கர் பாசனம் பயன்பெறும் அடவிநயினார் அணைக்கட்டு கடந்த பருவமழை காலத்தில் போதுமான அளவில் நிரம்பவில்லை. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்தபோதிலும் இந்த அணைக்கட்டு பகுதியில் எதிர்பார்த்த buy Bactrim online அளவு மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் சுமார் 80 அடியாக இருந்தது. இத்தகைய நிலையில் பிசான சாகுபடியை தொடர்ந்து கோடை வெயிலின் கடுமையான வெப்பம் காரணமாக அடவிநயினார் அணைக்கட்டு வறண்டு காட்சியளிக்கிறது. அணைப்பகுதிக்கு தண்ணீர் வரத்து முற்றிலும் நின்று விட்டது. இதன் காரணமாக அடவிநயினார் அணை மூலமாக கார் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய விவசாயிகள் அதற்கான ஆயத்தப்பணிகளை துவக்குவதில் பெரும் கவலைநிலையை அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் கோடை மழை அடவிநயினார் அணைக்கட்டு பகுதியில் அதிமான அளவில் பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக கார்சாகுபடி எப்படியும் மேற்கொண்டுவிடலாம் என்ற நம்பிக்கையும் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அணையினை பொறுத்தவரை வறண்டு காட்சியளிப்பதால் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களிலும் நீர்ப்பிடிப்பு குறைந்து காணப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சியின் காரணமாக அடவிநயினார் அணை வறண்டு காட்சியளிப்பதால், அணை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சுற்றுலா பயணிகளை போன்று அடவிநயினார் அணைக்கட்டு உட்பகுதியில் தண்ணீர் வரத்து ஏற்படக்கூடிய குறிப்பிட்ட பகுதியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதுண்டு. தற்போது அந்த பகுதியும் வறண்டு காணப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகளின் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Add Comment