2011 -உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் போட்டியிட வாருங்கள்!!!

சமூக சேவையாற்ற,வளமான வலிமையான் தமிழகத்தை உருவாக்கிக் காட்ட, உங்கள் கிராமம், வார்டு, பேரூராட்சி, நகராட்சி ஆகியவற்றுக்கான  உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட‌  விருப்பமுள்ளவர்கள் தேவை!!!!!!!

முன்பெல்லாம் இந்த அளவிலே சமூக சீர்கேடுகள் இல்லை, சமூகத்தை சீர்கெடச் செய்ய, மனசாட்சிக்கு பயந்தார்கள், கடவுளுக்கு பயந்தார்கள், மானம், மரியாதை போய்விடும் தெருவில் நடமாட முடியாது! என பயந்தார்கள்! ,

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் விளையும் என பயந்தார்கள்!

இப்போ மக்களிடம் நேர்மையில்லை, நீதிக்கு பயப்படும், மனசாட்சிக்கு பயப்படும், கடவுளுக்கு பயப்படும் மனநிலையில்லை. எப்படியாவது ஒரே நாளில் பணக்காரனாகிவிடவேண்டும் அது எந்த வழியில் பணம் வந்தாலும் பரவாயில்லை என்ற மன நிலையே வேரூன்றி விட்டதால் சமூக சீர்கேடுகள் பெருகிவிட்டன.

இவற்றையெல்லாம் சீராக்க, மக்களை நன்னெறிப்படுத்த விவேகானந்தர் இப்போதிருந்தால், வளமான வலிமையான இந்தியாவை உருவாக்கிக் காட்ட பத்துலட்சம் பேரை கேட்டிருப்பார்!

நேர்மையான‌ அரசியல்வாதியாக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தேவை!!!

கல்வித்தகுதி & குணநலன்கள் :

வயது 18 -க்குமேல் 45 வயதுக்குள் இருக்கும் குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு முதல் MBA படித்தவர்கள், பல துறைகளிலே ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் வசிக்கும் தெரு,  கிராமம், வார்டு, பேரூராட்சி, நகராட்சி  இவற்றிற்காக நாளொன்றிற்கு அல்லது வாரம் சில மணி நேரம் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், குறிப்பாக அரசு மற்றும் தனியார் யாருடைய பொருளையோ, பணத்தையோ செய்யும் உதவிக்காக (கைம்மாறாக) லஞ்சமாக பெறமாட்டேன்! என தன் மீதே சத்தியம் செய்யக் கூடிய, நேர்மையான சமூக அக்கறையுள்ள, முடிந்த வரை பிறருக்கு உதவுவேன் என்ற மனப்பான்மையுள்ள நல்லெண்ணம் கொண்டோர் முதலில் தமிழகத்திலும் படிப்படியாக இந்திய அளவிலும் சமூக சேவையாற்றும், தங்கள் பணி நேரம் போக,

மீதமுள்ள நேரத்தில் நேர்மையான‌ அரசியல்வாதியாக,
உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலராக,
மன்றத் தலைவர்களாகப்  பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தேவை!!!

( ஏற்கெனவே தமிழகத்தில் அரசியல் வியாதிகள்,சினிமாக்காரர்கள் நிறைய பேர் காசு கொடுத்து டாக்டர் பெற்றதால் அந்த வகையில் பட்டம் வாங்கியவர்கள் விண்ணப்பிக்க தவிர்க்கவும்!).

கூடுதல் தகுதிகள்/ அனுபவம்:

தங்கள் ஆற்றிய, ஆற்ற விரும்பும் சமூக சேவை குறித்த விபரங்கள், அரசின் நலத் திட்டங்கள் மக்களை எந்த ஊழல், லஞ்சமின்றி மிக தேவையான, சரியான பயனாளிகளுக்கு மட்டும் சென்று சேர!,

அரசு துறைகளில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள்,
கூடுதல் அம்சங்கள், ஆலோசனைகள், அனுபவங்கள்,

வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் எளிய வழிமுறைகள்,
சிக்கன மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தங்களின் கனவுகள், எண்ணங்கள், (எழுத்துக்கள்) திட்ட அறிக்கைகள், ஆராய்ச்சி கட்டுரைகள், அனுபவ ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

இந்த இயக்கத்தில் இணைவோர் விரும்பினால்,
வருங்காலத்தில் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் அனைத்து பதவிகளுக்குமான தேர்தல்களிலும்,
கல்வித் தகுதி, வயது, சமூகப் பணியில், ஆற்றிய சேவைகள், ஆற்றவிருக்கும் சேவைகள் குறித்து மக்களின் கருத்து, ஆதரவு இவற்றை பொறுத்து போட்டியிடலாம்!

ஊதியம் விவரங்கள்:
முக்கியமாய், இந்த இயக்கத்தில் இணைபவர்களுக்கு ஆற்றும் சேவைகள், ஆற்றவிருக்கும் சேவைகளுக்கு ஊதியம் கிடையாது!

முழுக்க முழுக்க தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும், நடத்த தன்னுடைய சொந்த வருமானத்தின் மூலமாகவே நிர்வகிக்க வேண்டும்!

சரி சாப்பாட்டுக்கு என்ன வழி?:

வேலைவாய்ப்பற்றவர்களுக்கு தங்களையும் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள, தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்க வேலைவாய்ப்பு தகவல்கள், தேவைப்படின் சிபாரிசுகள் வலைத்தளம் மூலமும், மற்ற நண்பர்கள் மூலமும் வழங்கப்படும்!

தொடர்பு Ampicillin online கொள்ள :

விருப்பமுள்ளவர்கள் பின்னூட்டத்திலும்,
தங்களின் சுய விவரங்கள் அடங்கிய குறிப்புகளுடன் தொடர்பு கொள்ளவும்!

ஆதரவாளர்கள் & பயனாளிகள்:

மேலும் தமிழகம், இந்திய நலனில் அக்கறை கொண்டுள்ள, சமீப காலமாய் நடக்கும் அரசியல், அதிகார, சட்ட, லஞ்ச முறைகேடுகளில் அதிருப்தி கொண்டு, விரக்தியாய் இவைகள் எப்பொழுது சீராகும், பூனைக்கு யார் மணியை கட்டுவது?, யாராவது ஒரு அவதார புருஷன் வர மாட்டானா? என ஏங்கி தவிப்பவர்கள்

ஏன் அந்த அவதார புருஷனாய் நாம், நம் சகோதரன், நண்பன் இருக்கக் கூடாது? என சிந்தித்து, அவர்களுடனும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டு, நாம் விரும்பும் மாற்றத்தை, எதையும் நம்மிலிருந்து முதலாய் துவக்கலாம் என்ற எண்ணத்தோடு  இணைந்து பணியாற்ற வாருங்கள்!

வாய்க்காளுயர.., வரப்புயரும், வயப்புயர.., நெல்லுயரும், நெல்லுயர …, ஒளவையாரின் வாக்கிற்கிணங்க

நம் தெருவும்,கிராமமும், பகுதியும் உயர நாடுயரும்,
நாடுயர நாம் தமிழர் உயர்வோம்! இந்தியர் உயர்வோம்!

நாட்டிற்கும் நம்மை பெற்ற வீட்டிற்கும் பெருமை சேர்ப்போம்!

பணியாற்ற வாருங்கள்!

பாரபட்சமற்ற முதுகலை வரை அனைவருக்கும் இலவச கல்வி & வேலைவாய்ப்பு, மனித உரிமைகள்&நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் கணக்கெடுப்பு மற்றும் முன்னேற்ற திட்டங்கள்!, மழைநீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள், குளங்கள், ஏரிகள், அணைகள் பராமரிப்பு & மேலாண்மை, சாலை பராமரிப்பு & நீர்வழி போக்குவரத்து மேலாண்மை, கழிவு நீர் மற்றும் திட, மின்னணு, பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சி,சுத்திகரிப்பு மற்றும் மேலாண்மை, e -Governance – வெளிப்படையான நிர்வாகம், ஊழல் வழக்குகளில் சிக்குவோர் உடனடி பணிநீக்கம், கடுமையான சட்டம், அதிவிரைவு விசாரணை நீதிமன்றங்கள், காவல் துறை நவீனமயமாதல் & சுதந்திரம், சாலை, ரயில், விமான,கப்பல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் அதிநவீன, விரைவான, பாதுகாப்பான சேவைகள்!, வனம் & சுற்று சூழல், தொழிற்சாலை, தொழிலாளர் பாதுக்காப்பு, உள்ளாட்சி முதல் ஜனாதிபதி வரை நன்கு படித்த,நேர்மையானவர்களை முக்கிய பதவிகளில் அமர்த்துதல், குறிப்பாய் ஜாதி மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஒழித்து, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய வாய்ப்பளித்து முன்னேற வழி செய்தல் மூலம் காலப் போக்கில் சாதி மதத்தை ஒழித்தல்…, போன்ற திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வர தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

Add Comment