மோடியுடன் சேர்த்து என் படத்தை வெளியிடுவதா? பீகார் முதல்வர் நிதிஷ் கோபம்: விருந்தும் ரத்து

குஜராத் மாநில அரசின் விளம்பரத்தில், தனது புகைப்படம் பயன்படுத்தப்பட்டதற்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இதற்கு பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பீகார் மாநிலம், கோசி ஆற்றில் 2008ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க, குஜராத் மாநில அரசும் நிதியுதவி அளித்தது. இந்நிலையில், இதுதொடர்பான விளம்பரம் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மற்றும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் புகைப்படத்துடன் நேற்று நாளிதழ்களில் வெளியானது. குஜராத் மாநில அரசால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரத்தினால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் எரிச்சல் அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பீகாரில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது, தாராளமாக நிதியுதவி வழங்கியதாக, பத்திரிகைகள் மூலமாக குஜராத் மாநில அரசு விளம்பரங்கள் வெளியிட்டது அநாகரிகமானது. மேலும், அந்த விளம்பரங்களில் குஜராத் முதல்வர் மோடியுடன், எனது புகைப்படமும் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இது சரியல்ல. எனது புகைப்படத்தை வெளியிட்டதற்காக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். இயற்கை சீற்றங்களால் துயரம் அடைந்த மக்களுக்கு உதவியது பற்றி தம்பட்டம் அடிப்பது இந்திய கலாசாரத்திற்கு எதிரானது. வெள்ள நிவாரணம் எவ்வளவு அளிக்கப்பட்டது என்பது பற்றிய விவரம் எனக்கு தெரியாது. அந்தப் பணத்தை குஜராத் அரசிடம் திரும்ப ஒப்படைப்போம்.

விளம்பரத்தில் எனது புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன், என்னிடமோ அல்லது எனது அலுவலகத்திடமோ அனுமதி கேட்கவில்லை. இந்த விளம்பரத்தால் எனக்கு பெரிய தர்மசங்கடம் உருவாகியுள்ளது. இப்படி விளம்பரம் வெளியிட்டதால், எங்களின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ., இடையேயான கூட்டணியில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

இதற்கிடையில், பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் தலைவர்களுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த விருந்து நிகழ்ச்சியையும் முதல்வர் நிதிஷ்குமார் ரத்து செய்தார். மோடியுடன் சேர்த்து நிதிஷ்குமார் படத்தை வெளியிட்டதால், இரு தரப்பிலும் தர்ம சங்கடமான சூழ்நிலை நிலவியதால், பா.ஜ., தலைவர்களும், நிதிஷ்குமாரின் விருந்தில் பங்கேற்க மறுத்து விட்டனர். இதனாலும், அவர் விருந்தை ரத்து செய்து விட்டதாகக் கூறப்படுகிறது.

அதேநேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜ., மூத்த தலைவர் ஒருவர், “”நிதிஷ்குமார் ஓவர் ஆக்டிங் செய்கிறார். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர் ஒருவரை இப்படியா நடத்துவது,” என்றார். நிதிஷ்குமார் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு முதல்வர் மோடியும் அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூறுகையில், “”விளம்பர நிறுவனத்தின் buy Ampicillin online கவனக்குறைவினால், தவறு நேர்ந்திருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

Add Comment