முஸ்லிம் ஆட்சியாளர்கள் சேவைகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு

இந்திய தேசத்திற்கு முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த சேவைகள் வேண்டுமென்றே இருட்டடிப்பு உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

இந்திய திருநாட்டில் மதசார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்கள் செய்த தன்னலமற்ற சேவைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டதாக உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி நீதியரசர் மார்கண்டேய கட்ஜு வேதனை தெரிவித்திருக்கிறார்.
குறிப்பாக மாவீரன் திப்புசுல்தான் இந்த தேசத்திற்காக தேச மக்களுக்காக சாதி மத இன வேறுபாடு பார்க்காமல் சேவையாற்றியதை வேண்டுமென்றே வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டு உள்ளதாக வேதனை தெரிவித்த மார்கண்டேய கட்ஜு, கஜனி முகமது பற்றி வெறுப்பூட்டும் கருத்துக்களை பரப்பியவர்கள், திப்பு சுல்தான் 153 ஹிந்து கோயில்களுக்கு நிதி உதவி செய்து ஹிந்து மக்களால் மறக்க முடியாத மாமன்னனாக விளங்கியதை இருட்டடிப்பு செய்தது ஏன்? என்றும் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கேள்வி எழுப்பினார்.

நாட்டில் தொடர்ந்து சமூக ஆர்வலர்களாலும் Buy cheap Lasix சமூக வியல் அறிஞர்களாலும் மத சார்பற்ற சரித்திர நிபுணர்களாலும் பல்வேறு தளங்களிலும் விவாதிக்கப்பட்டு வந்த இந்த கருத்துக்களை முதல் முதலாக இந்தியாவின் உயர்நீதிபீடமாம் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பகிரங்கமாகக்குறிப்பிட்டு வேதனை தெரிவித்திருப்பது இந்திய சமூக தளத்தில் முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் நீதிபதி மார்கண்டேய கட்ஜு உரையாற்றும் போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் அவுத் நவாபுகள் ஆட்சி செய்யும்போது உண்மையான மதசார்பற்ற ஆட்சியாளர்களாக விளங்கினார்கள் என்ற உண்மையை மறைத்து விட்டார்கள். அதற்கு காரணம் நம் தேசத்தில் வளர்ந்து வரும் மத வாதத்தை காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Add Comment