அதிபர் தேர்தலை தொடர்ந்து நைஜீரியாவில் கலவரம்: மக்கள் வெளியேற்றம்

அண்மையில் நடைபெற்ற நைஜீரியாவின் அதிபர் தேர்தலில் குட்லக் ஜோனாதன் 57 சதவீதம் வாக்குகள் பெற்றதைத் தொடர்ந்து அவரே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. Cialis online இது எதிர்கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் சர்வாதிகாரி முகமது புகார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும், முகமது புகார் பெற்ற வாக்கு சதவீதமும் 31% என்பதால், ஆளும் கட்சியினர் நடைபெற்ற தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

அதே வேளையில், ஆளும் கட்சியினர் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஆட்டம் பாட்டம் மற்றும் களியாட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இது முகமது புகார் ஆதரவாளர்களுக்கு பெருத்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரம் நாடு முழுவதும் பரவி குறிப்பாக குதுனா, கத்சினா மற்றும் ஷம்பாரா ஆகிய மாகாணங்களில் அதிகமான வன்முறை சம்பவங்கள் நடைபெறுவதாகவும் அதனால் ஆயிரக்கணக்கில் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பரவிய இக்கலவரத்தில் பல பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் என்றும் நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கினறன. கலவரத்தில் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் தென்குதுனா பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் செஞ்சிலுவை சங்க பேரிடர் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உமர் அப்துல் மரிகாவை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கிடையில் கலவரத்தில் ஈடுபடுவோரை அமைதி காக்கும்படி அதிபர் குட்லக் ஜோனாதன் மற்றும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட முகமது புகாருயும் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment