அருவிகளில் தண்ணீர் தாராளம் குற்றாலத்தில் சுற்றாலா பயணிகள் “குஷி’

குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் கடந்த 3 நாட்களாக சுமாராக தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த சாரல் மழை காரணமாக மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் ஐந்தருவியில் 4 கிளைகளிலும் விழுந்த தண்ணீர் நேற்று காலை 5 கிளைகளிலும் தண்ணீர் விழுந்தது.

புலியருவியில் நேற்று தண்ணீர் வரத் துவங்கியது. இதனால் இந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் தங்களது குழந்தைகளுடன் குதூகலமாக குளித்து மகிழ்ந்தனர். மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவிகளில் குளித்துவிட்டு பழைய குற்றாலம் அருவியில் குளிக்க ஆர்வத்துடன் சென்ற சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றமடையும் வகையில் அருவியில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் வறண்டு காணப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதலே குற்றாலம் மலைப்பகுதியில் பகுதியில் அவ்வப்போது சாரலுடன் கூடிய மழை Buy Viagra பெய்தது. நேற்று காலை சாரலுடன் கூடிய மழையும், குளிர்ந்த காற்றும் வீசியது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகளவில் காண முடிந்தது.

இன்றும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்மேற்கு பருவமழையின் சாரல் தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் காணப்பட்டது.

Add Comment