பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவன் பேஸ்புக் மூலம் மீட்பு!

கடந்த 2 வாரங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலம் காந்திவெலியில் கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் ஒருவன் இணையதள “ஃபேஸ்புக்” மூலம் மீட்கப்பட்டுள்ளான்.

மகாராஷ்டிராவில் காந்திவலி மகாவீர் நகரில் வசிக்கும் ஆனந்த் ஷாவின் ஆறு வயது மகன் கர்னித். கடந்த ஆறாம் தேதியன்று வெளியே விளையாட சென்றபோது திடீரென காணாமல் போனான். அவனை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து ஈடுபட்டனர். ஆனந்த் ஷா தனது மகனின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு, அவனை கண்டுபிடித்தால் தகவல் கொடுக்கும்படி தனது செல்போன் எண்ணை கொடுத்தார். Buy Ampicillin அவனை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு கொடுக்கப்படும் என அறிவித்தார்.

உடனடியாக அவருடைய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது. ஃபேஸ்புக் மூலம் கர்னித்தின் புகைப்படத்தை பார்த்த ஒருவர், அவன் உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருப்பதாக ஆனந்த் ஷாவுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவல்துறையினருக்கு ஷா தகவல் கொடுத்தார். அங்கு விரைந்த காவல்துறையினர் சிறுவன் கர்னித்தை மீட்டனர்.

அவனை கடத்திய சோகன் சிங் மற்றும் அவனது நண்பர்கள் நால்வர் கைது செய்யப்பட்டனர். ஆனந்த் ஷாவின் வீட்டுக்கு அருகே சோகன் சிங் பேக்கரி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பணம் பறிப்பதற்காக கர்னித்தை கடத்தியதாக விசாரணையில் அவர் கூறினார்.

Add Comment