“ரேஷன் கடைகளைவிட மதுக் கடைகள்தான் அதிகம்”! அமீர் ஆவேசம்

ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம் என்று பத்திரிக்கை நிரூபர்களுக்கு இயக்குனர் அமீர் ஆவேசத்துடன் பேட்டியளித்தார். தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, திருவிழா பொம்மைகளைப்போல் தெருவுக்கு வரும் அத்தனை சினிமா நட்சத்திரங்களையும் கண்டிப்பதாகவும் கூறினார்.

கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க-வுக்காக ஓட்டு கேட்ட சிம்ரனும் சினேகாவும் இன்றைக்கு எங்கே போனார்கள்? காவிரி விவகாரத்தில் கைவிட்டவர்கள், ஒகேனக்கல் விவகாரத்தில் ஒதுங்கி நின்றவர்கள், இப்போது வாக்குகளைத் திரட்ட மட்டும் வருவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இத்தனை வருட காலத்தில் இந்த வடிவேலு எங்கே போய் இருந்தார்? விஜயகாந்த் உடனான பழைய பகையை மனதில்வைத்து அவரை வசை பாடினார் வடிவேலு. சொந்தப் பிரச்னைக்கும் சொத்துத் தகராறுக்கும் அரசியல் களத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சகிக்க முடியாத அவலம்.

இந்தத் தேர்தல் களத்தில் சீமானின் எழுச்சிமிகு பேச்சு தொடங்கி, வைகோ-வின் மௌனம் உட்பட, அனைத்து அரசியல் தலைவர்களின் பேச்சையும் நான் கூர்ந்து கவனித்தேன். வடிவேலு Buy cheap Amoxil அளவுக்கு யாரும் கேவலமாகவோ கீழ்த் தரமாகவோ பேசவில்லை. குடிக்கிறவன் கெட்டவன் என்றால், அதை விற்கிறவன்? இதைக் கேட்பதால் நான் யாரையோ ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம். இரு கட்சிகளுமே மதுக் கடை விஷயத்தில் ஒரே கொள்கையோடுதான் இருக்கின் றன.

அரசே நடத்தும் மதுக் கடையில், அரசு நிர்ணயித்த விலையைக் கொடுத்து, மது குடிப்பதை தவறு என்று எப்படி சொல்ல முடியும்? தவறுன்னா, ஏன் அர சாங்கமே அந்தக் கடைகளைத் திறந்து வெச்சிருக்கு? ரேஷன் கடைகளைவிட இங்கே மதுக் கடைகள்தான் அதிகம்!” என்று ஆவேசத்துடன் பேசினார் இயக்குனர் அமீர்.

Add Comment