குற்றாலத்தில் சாரல் மழை- குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையை கொண்டாடிட குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் நடத்தினர். தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலம் மலைப்பகுதியில் கடந்த 4 நாட்களாக கோடை மழை லேசான சாரலுடன் buy Bactrim online துவங்கி பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை நாட்கள் என்பதாலும், அருவிகளில் தண்ணீர் விழத் துவங்கியுள்ளதாலும் ஏழைகளின் ஊட்டியான குற்றாலத்திற்கு தென்காசி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர். இவர்கள் மெயின் அருவியில் பரவலாக விழுந்த தண்ணீரிலும், ஐந்தருவியில் 3 கிளைகளிலும் பரவலாக விழுந்த தண்ணீரிலும் ஆனந்தமாக குளித்தனர். கோடை மழையை தொடர்ந்து குற்றாலம் பகுதியில் இப்போதே சீசன் களை கட்டியது போன்ற ரம்யமான சூழ்நிலை நிலவுகிறது. நேற்று மாலை தொடர்ந்து பன்னீர் போன்ற சாரல் மழை பெய்து வந்தது சுற்றுலா பயணிகளை பெரிதும் மகிழ்ச்சியடைய செய்தது.

குற்றாலத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 15ம் தேதிக்கு மேல் சீசன் அறிகுறி தெரியும். பின்னர் இந்த சீசன் சுமார் மூன்றரை மாதங்கள் வரை நீடிக்கும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே கோடை மழை மாலை நேரங்களில் வெளுத்து வாங்குகிறது. நகர் பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாலை 4 மணி முதல் மழை பெய்தது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பாறைகள் மட்டுமே பளிச்சென தெரிந்த அருவிகளில் தண்ணீர் விழுத் துவங்கியுள்ளது. இந்நிலையில் கோடை வெயிலால் பெரிதும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு குற்றால அருவிகளில் தண்ணீர் விழுவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது காலையில் வெளுத்து வாங்கும் கோடை வெயில் மாலை 4 மணிக்கு மேல் காணாமல் போய்விடுகிறது. மாலையில் பொதிகை மலைமேல் பன்னீர் போன்ற தூரல் பெய்து அருவிகளில் தண்ணீராய் கொட்டுகிறது.

Add Comment