மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1 ஆண்டில் பட்ட படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க வசதி

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., தொலை தூர கல்வியில் ஒரு ஆண்டில் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படிக்க மாணவ, மாணவிகளுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலை தூர கல்வியில் இந்த காலண்டர் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எம்.பி.ஏ மேலாண்மை படிப்பு இரு ஆண்டுகளாகும். ஆறு பிரிவுகள் உள்ள இப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு கிடையாது. புரொபஷனல் எம்.பி.ஏ ஒரு ஆண்டில் படிக்கலாம்.

பட்ட மேற்படிப்பில் எம்.எஸ்சி இயற்பியல், வேதியியல், சுற்றுசூழல் கல்வி, கணிதம், உளவியல், சாப்ட்வேர் டெக்னாலனஜி பிரிவுகளும், எம்.ஏ தமிழ், இந்தி, வரலாறு, கிரிமினலாஜி, பொது நிர்வாகம், தகவல் பரிமாற்றம், செய்தி பிரிவு, சுற்றுலாவியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், எம்.காம், எம்.காம் கம்ப்யூட்டர் கல்வி உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் நேரடி சேர்க்கை நடந்து வருகிறது.

கம்ப்யூட்டர் பிரிவில் எம்.சி.ஏ இரு ஆண்டுகளாகும். பி.சி.ஏ படித்தவர்கள் மற்றும் டிகிரி உடன் பிஜிடிசிஏ படித்தவர்கள் சேரலாம். டிப்ளமோ படித்தவர்கள் பி.சி.ஏ 2 ஆண்டுகளில் படிக்கலாம். பிஜிடிசிஏ டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் ஸ்பாட் அட்மிஷன் நடக்கிறது.

பட்டப் படிப்பு பிரிவில் பி.எஸ்சி கணிதம், உளவியல், பி.பி.ஏ, பி.பி.எம், பி.காம், பி.காம் கம்ப்யூட்டர், பி.ஏ தமிழ், பி.லிட், பி.ஏ ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், நூல் அறிவியல், இந்தி, இஸ்லாம், அராபிக் அனைத்து பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடந்து வருகிறது.

பட்ட மேற்டிப்பு டிப்ளமோ பிரிவில் நுகர்வோர் உரிமைகள், மனித உரிமைகள், வரி காப்பீடு, ஏற்றுமதி, இந்தி, யோகா, ஆங்கில பயிற்சி, மியூசிக், ஆஸ்பத்திரி மேலாண்மை ஆகிய 14 பிரிவுகள் உள்ளன. டிப்ளமோ பிரிவில் 13 பாட பிரிவுகளும், Ampicillin online சான்றிதழ் பாட பிரிவில் 9 பாட பிரிவுகளுக்கும் அட்மிஷன் நடந்து வருகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கடைசி தேதியான வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே எம்.ஏ/எம்.எஸ்சி/எம்.காம் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் அனைத்து பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து கூடுதல் பட்ட மேற்படிப்பு எம்.ஏ ஒரு ஆண்டில் பயிலலாம். ஏற்கனவே பி.ஏ/பி.எஸ்சி/பி.காம் பட்ட படிப்பு முடித்தவர்கள் அனைத்து பட்ட மேற்படிப்புகளில் சேர்ந்து கூடுதல் பட்ட படிப்பு பி.ஏ, பி.எஸ்சி, பி.காம், பி.பி.ஏ ஒரு ஆண்டில் பயிலலாம்.

கல்லூரி படிப்பை அல்லது தொலை தூர கல்வி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் அடுத்த ஆண்டிற்கான படிப்பை தொடரலாம். இக்கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் கிடையாது. நேரடி சேர்க்கை மற்றும் மேலும் விபரங்களுக்கு நெல்லை ஜங்ஷன் மேம்பாலம் ஷிபா ஆஸ்பத்திரி அருகில் உள்ள நெல்லை கல்வி மையத்தை (போன் 0462 – 4020304, 94860 36701 அணுகலாம் என்று கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் கணேசன் தெரிவித்தார்.

Add Comment