கடையநல்லூரில் கர்ப்பிணி உயிரைப் பறித்த அரிசி!

கடையநல்லூரில் கர்ப்பிணி பெண் வாயில் அரிசியைப் போட்டு மென்றபோது எதிர்பாராத விதமாக திடீரென்று புரையேறி மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

முத்துகிருஷ்ணாபுரம் நாட்டாமை தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி முத்துசெல்வி (23). இருவருக்கும் திருமணமாகி 3 வருடங்களாகிறது. முத்துசெல்வி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள தனது தாய் வசந்தா வீட்டிற்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் கடந்த 23ம்தேதி வீட்டில் படுத்திருந்த இவர் அதே நிலையில் வாயில் அரிசியைப் போட்டு மென்றுள்ளார். Buy Levitra Online No Prescription அப்போது எதிர்பாராத விதமாக திடீரென்று புரையேறி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கடையநல்லூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Add Comment