ஐந்தருவியில் கடைகள் திறக்காததால் சுற்றுலா பயணிகள் அவதி

ஐந்தருவியில் கடைகள் திறக்காததால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து நெல்லையில் மாவட்ட கலெக்டர் ஜெயராமன் Buy cheap Lasix தலைமையில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக இருக்கும் ஆக்ரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த ஆக்ரமிப்பு அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துவங்கியது. இதில் முதற்கட்டமாக இலஞ்சி சவுக்கு முக்கு பகுதியிலிருந்து குற்றாலம் செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்ரமிக்கப்பட்டிருந்த கடைகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

பின்னர் குற்றாலம், ஐந்தருவி பகுதியிலும் ஆக்ரமிப்புகள் அகற்றும் பணி நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்தருவி பகுதியில் சீசனுக்காக கடை திறந்த அனைத்து வியாபாரிகளும் கடையை திறக்க மறுத்துவிட்டனர். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் தங்களுக்கு குளிப்பதற்கு தேவையான எண்ணெய், சாம்பு மற்றும் உணவு பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. காலைக்கடன் கூட கழிக்க முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது :- “”கடந்த 20 வருடங்களாக ஐந்தருவி பகுதியில் கடைகள் எடுத்து வியாபாரம் செய்து வருகிறோம். இதுபோன்ற திடீர் ஆக்ரமிப்பு அகற்றும் பணி இந்த ஆண்டு தான் நடந்துள்ளது. இந்த கடைகளை எடுக்க நாங்கள் அதிகளவில் பணம் கட்டியுள்ளோம். முன் அறிவிப்பின்றி நேற்று முன்தினம் இரவு திடீரென வந்து கடைகளை அகற்றினர். இதனால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நடக்கும் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு தகுந்த முடிவை எடுத்தால் நாங்கள் கடைகளை திறக்க முடிவு செய்வோம்” என கூறினர்.

ஐந்தருவி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பது குறித்து சுற்றுலா பயணிகளிடம் கேட்டபோது: – குற்றாலம் என்றாலே அருவிகளில் குளித்து ஜாலியாக இருக்கலாம். பணம் மட்டும் கொண்டு வந்தால் போதும் அனைத்துமே இங்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். ஐந்தருவி பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் பொருட்கள் வாங்க சிரமமாக இருந்தது” என்றனர்.

மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Add Comment