தமிழகத்தில் விரைவில் இடமாறுதல் கவுன்சிலிங்: விண்ணப்பங்களை அளிக்க ஆசிரியர்களுக்கு “கெடு’

தமிழகத்தில் விரைவில் நடத்தப்படும் இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பங்களை அளிக்க ஆசிரிய, ஆசிரியைகளுக்கு “கெடு’ விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதனையொட்டி ஆசிரியர் இட மாறுதல் கவுன்சிலிங்கும் வரும் ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை Buy Amoxil பெறுவது தொடர்பாக கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகளுக்கு வரும் மே மாதம் 10ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரையை பெற்று வரும் 12ம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.தொடக்க கல்வித் துறை:>தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் வரும் 29ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரையின்படி உதவி தொடக்க கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் மூலம் ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு இந்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. உள் மாவட்ட அளவில் இடமாறுதல் கோருபவர்கள் 3 விண்ணப்பங்களையும், வெளி மாவட்ட அளவில் இடமாறுதல் கோருபவர்கள் 4 விண்ணப்பங்களையும் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட இடமாறுதல் கவுன்சிலிங் நடைமுறைகளே இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கல்வி ஆண்டில் வழக்கம் போல் இல்லாமல் வெளிப்படையான நேர்மையான முறையில் இட மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று ஆசிரிய, ஆசிரியைகள் விரும்புகின்றனர்.

Add Comment