விமானிகள் ஸ்ட்ரைக்: 20 விமானங்கள் ரத்து; பயணிகள் பெரும் அவதி!

ஏர் இந்தியா நிறுவன விமானிகளில் 800 பேர் நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். Buy Lasix Online No Prescription இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 20-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உள்நாட்டு விமான நிறுவனமான இந்தியன் ஏர்லைன்ஸை ஏர் இந்தியாவுடன் இணைத்த போது, இரு நிறுவன ஊழியர்களும் விமான நிறுவனங்களுக்கு இடையே ஒரே மாதிரியான சம்பள விகிதம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

கோரிக்கை தொடர்பாக நிர்வாகத்துக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கும் இடையே பல நாட்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் இந்த வேலை நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதன் காரணமாக, உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கும் என்று விமான நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மும்பையிலிருந்து 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமான நிலையங்களிலும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை இப்படி ரத்தான விமானங்களின் எண்ணிக்கை 20-ஐத் தாண்டுகிறது.

சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு கடிதம்:

இதற்கிடையே, ஏர் இந்தியா நிறுவன நிர்வாக முடிவுகள், ஏற்பட்டுள்ள நஷ்டம் போன்றவை குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளுமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விமானிகள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 111 புதிய விமானங்களை வாங்கியது, பயணிகள் விமானங்களை கார்கோ விமானங்களாக மாற்றியது, பின்னர் அவற்றை கிடப்பில் போட்டு நஷ்டத்தை ஏற்படுத்தியது போன்றவை குறித்தும் விசாரிக்கக் கோரியுள்ளனர். இதனை வலியுறுத்தி விமானிகள் சார்பில் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

Add Comment